Breaking News

ஊருக்கு உபதேசம் செய்யாதீர்

நிர்வாகி
0
ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு, தாங்கள் இஷ்டம் போல நடப்பவர்களுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என்று நபிகள் நாயகள் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்.

ஊருக்கு அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி றயப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுத்தை சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான்.

இதைப் பார்த்துவிட்டு அவனிடம் அறிவுரை பெற்றவர்கள், நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத்தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று கேட்பார்கள்.

அதற்கு அவன், நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நான் அதன் அருகில் கூட சென்றதில்லை. உங்களை தீமையில் இருந்து தடுத்த நான், அதையேச் செய்து கொண்டிருந்தேன் என்று பதில் சொல்லும் நிலை ஏற்படும் என்கிறார் நபிகள்.

ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. ஆனால் அதனை கடைப்பிடிப்பது கடினம். எனவே நல்லதை கடைபிடித்தால் மட்டுமே அல்லாஹ்வின் அன்பைப் பெற முடியும்.

Tags: ஹதீஸ்

Share this