Breaking News

புகைப்பிடித்தலை கைவிடுவோருக்கு 10,000 திர்ஹம் பரிசு!

நிர்வாகி
0
“புகை பிடித்தலைக் கைவிடுபவர்களுக்கு 10,000 திர்ஹம் பரிசு” என ஷார்ஜா இஸ்லாமிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இசுலாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு புகை பிடித்தலைக் கைவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உறுதி கொள்ளும் நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து இப்பரிசு தொகை வழங்கப்படுகிறது.

புகை பிடித்தலை நிறுத்தியவர்கள் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் மூலம் அதனை நிரூபிக்க வேண்டும். ரமலான் மாதத்தில் 30 நாட்களும் புகை பிடிக்காமல் இருப்போர்களில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் பரிசாக 10,000 திர்ஹம் வழங்கப்படுகிறது.

அமைச்சகத்தின் அறிவிப்பில், இதற்குள் நூற்றுகணக்கானோர் புகைபிடித்தலைக் கைவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க இருப்பதாக அமைச்சகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது. புகை பிடித்தலைக் கைவிடுதலை ஊக்குவிக்கும் முகமாக கடந்த ஆண்டு ரமலான் மாதத்திலும் இது போன்ற பல வித்தியாசமான கேம்ப்கள் அமைச்சகம் நடத்தியிருந்ததும் கடந்த 2008 ஜூன் மாதம் முதல் ஷார்ஜாவில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this