ஜாஹிர் நாயக் கேள்வி-பதில்
நிர்வாகி
0
துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனிதகுர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்.இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட அரங்கில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பல்வேறுசமயங்களைச்சார்ந்தோறும் கலந்துக்கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியில் "அழைப்பு பணியா அல்லது அழிவா”(“Dawaah or Destruction”) என்ற தலைப்பில் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்துகுர்ஆன்,சுன்னா ஆதாரங்களுடன் உதாரணங்களையும் கூறி சிறப்பானதொருஉரையை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்கலந்துக்கொண்டு ஐரோப்பாவைச்சார்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாம் குறித்துதர்க்கரீதியான(Logic) கேள்வியொன்றை எழுப்பினார்.அவருடைய கேள்விக்குஅறிவுப்பூர்வமான பதிலை டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்கள் கூறியதைக்கேட்டுதிருப்தியடைந்த அப்பெண்மணி சத்தியம் இதுதான் என்று தெளிவானதும்ஷஹாதா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஒப்புக்கொண்டார்.(அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தில் அவருடைய பாதங்களை உறுதிப்படுத்துவானாக).டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியின் காரணமாக துபாய் ஏர்போர்ட்டெர்மினல் 3க்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது.
Tags: துபாய் ஜாஹிர் நாயக்