சுதந்திர தினம் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி:
நிர்வாகி
0
சென்னை: நாட்டின் 63வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங்
63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''நம்முடைய தாய்நாட்டின் விடுதலைக்காக தியாகங்கள் செய்த நம்முடைய முன்னோர்களுக்கு இந்த நன்னாளில் நாம் மரியாதை செலுத்துவோம். நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் நாடு இன்னும் பல வளர்ச்சிகளை அடைய ஒன்றுபடுவோம்'' என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி:
அண்டை மாநிலங்களுடன் தொடர்ந்து நல்லுறவு பேணப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு என்றும் செயல்பட்டு வரும் இந்த அரசு ஒரு முத்திரைச் சாதனையாக கர்நாடக மாநில அரசுடன் இணைந்து பெங்களூரில் அய்யன் திருவள்ளுவர் சிலையைத் திறந்தும், சென்னையில் கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையை திறந்து வைத்தும் தேசிய அளவில் மாநிலங்களுக்கிடையே நல்லுறவு பேணப்படுவதற்கு வழிகாட்டப்பட்டுள்ளது.இந்த இனிய வேளையில் கொண்டாடப்படும் சுதந்திரத் திருநாளில் சாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் ஒன்றுபட்டு நின்று, சுதந்திரத்தின் பயன் முழுவதும் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட அனைவரும் உறுதியேற்று உழைப்போம் என்று கூறியுள்ளார்..
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:
"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் மலருவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும்,தமக்கென வாழாமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும், இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்! பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்த்:
ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத நாள் சுதந்திர தினம். ஜனநாயகம் என்ற பெயரால் இன்று சமூக விரோதிகள் அரசியல் ஆக்கிரமித்துள்ளனர்.ஆக்டோபஸ் போன்ற இந்த கொள்ளைக் கும்பலிடம் அனைத்துத் தரப்பினரும் சிக்கி அவதிப்படுகின்றனர். இவர்களிடமிருந்து ஜனநாயகத்தை மீட்க சுதந்திர நாளை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Tags: சுதந்திரதினம் வாழ்த்துக்கள்