Breaking News

நட்பு பொன்மொழிகள்

நிர்வாகி
0
நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன.
அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது.
அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான்.
ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு.
ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய்.
சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர்.
ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர்.
ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள்.
புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

Tags: நண்பர்

Share this