Breaking News

சிதம்பரம் பகுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

நிர்வாகி
0
சிதம்பரம்,செப்.22-
ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அதே போல் கடலூர் மாவட் டம் சிதம்பரம் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் சிறப்பான முறையில் கொண்டாடினர்.

பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டனர்.சிதம்பரத்தில் பள்ளிப்படை மசூதியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பரங்கிப்பேட்டை

அதேபோல் பரங்கிப்பேட் டையில் உள்ள பெரிய பள்ளிவாசலிலும் ரம் ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பான முறையில் கொண்டாடினர்.தொடர்ந்து பரங்கிப் பேட்டை இஸ்லாமிய ஐக்கியஜமாத் சார்பில்ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி ,சமையல் பொருட்கள், துணி மணிகள் வழங்கப் பட்டது.

இதனை ஜமாத்தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருமான முகமது ïனுஸ் வழங்கினார்.நிகழ்ச் சிக்கு கலிமா.அப்துல் காதர் மரைக் காயர் தலைமை தாங்கினார்.இதில் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

லால்பேட்டை

லால்பேட்டையிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவை யொட்டி குத்பா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் அதிகாலை தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டனர்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஜமாத்துல் உலமாசபை மாநில தலைவர் மவுலானாஅப்துர் ரகுமான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்.லால்பேட்டை ஜே.எம்.ஏ. அரபுக்கல்லூரி முதல்வர் மவுலானா நூருல் அமீன் ஹஜ்ரத் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் லால்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளி வாசல் ஜமாத்தார்கள் ஆயிரக் கணக் கானோர் கலந்து கொண் டனர். முன்னதாக அதிகாலை யில் லால்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் க ளிலும் முஸ்லிம் பெரியோர்கள் ,இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்து அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் முழங்க ஊர்வலமாக வந்து தொழுகை நடத்தினர்.

அதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதில் உலக அமைதிக் காகவும், அனைவரும் நலமாக வாழ வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.மேலும் பன்றிக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் நோய் நொடிகள் பரவாமல் பாதுகாப்பு, மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதே போல் காட்டுமன்னார் கோவில் ஆயங்குடி, கொள்ளு மேடு, மானியம்ஆடூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம் ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
செய்தி :தினத்தந்தி...
http://www.dailythanthi.com/article.asp?NewsID=515649&disdate=9/22/2009&advt=2

Tags: கொண்டாட்டம் பெருநாள்

Share this