Breaking News

முஸ்லிம் பெண்களுக்கு சைவ அழகு சாதனப் பொருள்

நிர்வாகி
0
துபாய் : முஸ்லிம் பெண்களுக்காக, ஆல்கஹால் மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் பொருள் இன்றி சைவ முறையில் தயாரிக்கப்படும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதாக, கனடா நாட்டை சேர்ந்த அழகு கலை நிபுணர் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டை சேர்ந்த மேக்-அப் கலைஞர் லயலா மண்டி. முஸ்லிமாக மதம் மாறிய இவர், தான் விற்கும் அழகு சாதனப் பொருட்கள் தூய்மையானது என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, லயலா மண்டி கூறியதாவது:பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில், ஆல்கஹால் மற்றும் பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட பொருளும் பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹால் மற்றும் பன்றிக்கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் பொருள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது, இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது.எனவே, நான் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களில், இஸ்லாமிய சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள, இத்தகைய பொருட்களை பயன்படுத்தவில்லை. இந்த அழகு சாதனப் பொருட்கள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன.இவ்வாறு லயலா மண்டி கூறினார்

Share this