லால்பேட்டை நகருக்கும் தாய் மற்றும் தந்தை உள்ளிட்ட குடும்பத்திற்கும் பெருமை தேடி தந்த சிங்கப்பூர் வாழ் இளையர் !
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பில் "இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்" தலைப்பில் 2025 ஆண்டின் தமிழ் மொழி விழா உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் பேரவை தலைவர் அ.முஹம்மது பிலால் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லிம் லீக் சிங்கப்பூர் தலைவர் மூத்த சமூக அடித்தள தலைவர் அண்ணண் புதிய நிலா மு.ஜஹாங்கீர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இச்சிறப்பு மிகு தமிழ் மொழி விழாவில் சிங்கப்பூர் SIM & University of London மாணவர், லால்பேட்டை மண்ணிற்கு பெருமை தேடி தரும் வகையில் மு.முஹம்மது ஜாஃபிர் என்ற இளையர் மிகச் சிறப்பாக இன்பத் தமிழில் அரங்கம் நிரம்ப அனைவரின் அன்பையும் பெரும் வண்ணம் அழகியதொரு சிறப்புரையாற்றினார்.
அவரது உரை மேடைப் பேச்சுக்கே உரித்தான பாவனையில் நிதானமுடன் அதே சமயம் எல்லோரும் வியக்கத்தக்க வகையில் தமிழின் கலை, இலக்கியம் சார்ந்து நண்பருடன் பகிர்ந்துக் கொள்ளும் உரையாடல்களுடன் இணைத்து வழங்கினார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய சிங்கப்பூர் தேசிய பல்கலை கழக பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் (நான்கு முறை) அந்த இளையரின் பேச்சை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரர் ஜாபிர் அவர்களின் குடும்பம் குறித்த தகவல்.
வரலாற்று சிறப்புமிக்க லால்பேட்டை நகரின் பாரம்பரியமிக்க குடும்பங்களின் ஒன்றான சிதம்பரத்தார் குடும்பத்தை சார்ந்த மர்ஹும் ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஹை அவர்களின் மகனார் மர்ஹும் எஸ்.ஏ.கமாலுதீன் அவர்களின் பேரர் கே.முஹம்மது பைஜல் அவர்களின் அன்பு மகனார் தான் சிறப்புரையாற்றிய சகோதரர் முஹம்மது ஜாஃபிர்.
எஸ்.ஏ.முஹம்மது ஹாதி, எஸ்.ஏ.ஜலாலுதீன், மவ்லவி எஸ்.ஏ.தமீஜுதீன், எஸ்.ஏ.முஹம்மது மைதீன், எஸ்.ஏ.ஜாக்கீர் ஹுசைன் ஆகியோர் ஜாபிர் அவர்களின் தந்தை வழி தாத்தக்களாகும் மேலும், கே.முஹம்மது ரஃபி அவரது பெரிய தந்தையாவார்.
லால்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோயில் நகர்களில் பிரசித்திபெற்ற நியூ ஜவுளி ஹால் என்ற வணிகத்துறையை தந்தை மவ்லவி மர்ஹும் எஸ்.ஏ.தமீஜுதீன் வழியில் மிகச் சிறப்பாக வழி நடத்தி வரும் அன்பு சகோதரர்களான ஹிலூர், முஹம்மது யூசுப் ஆகியோர் தம்பி ஜாபிரின் அன்பு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.
சிங்கப்பூர் நாட்டின் சிறப்புமிகு தமிழ் மொழி விழாவில் அந்த இளையர் லால்பேட்டை மண்ணிற்கும் அவரின் குடும்பத்திற்கும் பெருமை தேடி தரும் வகையில் சிறப்பானதொரு உரையை வழங்கி எம்மையும் சேர்த்தே நெகிழ்ச் செய்துவிட்டார்.
லால்பேட்டை மக்கள் மற்றும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பிலும் எம் நெஞ்சம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக், லால்பேட்டை மண்ணின் சிங்கப்பூர் இளையர் முஹம்மது ஜாஃபிர், கொடிக்கால்பாலையம் சங்க மூத்த தலைவர் வி.எஸ்.என்.காதர் அலி, கே.முஹம்மது பைஜல் (ஜாஃபிர் தந்தை) ஆகியோர் இப்புகைப்படத்தில் உள்ளனர்.
ஏ எஸ் முஹம்மது இஸ்மாயில்
லால்பேட்டை.
S/O. மர்ஹும் மெளலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ
Tags: லால்பேட்டை