Breaking News

அணையா விளக்கு,அப்துல் ஸமது....!

நிர்வாகி
0
அனைத்துலக இஸ்லா மியத் தமிழ் இலக்கிய மூன்றாம் மாநாடு - உலகளாவிய அளவில் அறிஞர் பெருமக்கள் குழுமி யிருந்த அரங்கு. சீரிய சிந்தனையாளர் களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

மாபெரும் மாநாட்டை நடத்தியதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள் மேடையில் சோகம் ஆம்.

பொற்கிழி வாங்கிய சிந்தனையாளர்கள், தொகை குறைவு ஆகவே திருப்பித் தருகிறோம் என சொன்னதால்தான் அந்த சோகமும் - அதிர்ச்சியும்! எவர் சொல்லியும் சமாதானம் செய்ய முடிய வில்லை
அந்த நெருக்கடியான நேரத்தில்...

என்ன காரியம் செய் கிறீர்கள்.... காயல்வாசிகள் கொடுத்துப் பழக்கப்பட்ட வர்கள்.

அவர்களுக்கு வாங்கத் தெரியாது வர லாற்றை மாற்றி விடாதீர் கள். இந்த பிரம்மாண்டமான பந்தலைத் தாங்கி நிற்கும் தூண்களைப் பாருங்கள் அவைகள் கம்பங்களல்ல - இந்த மண்ணில் தோன்றி இஸ்லாமியத் தமிழுக்கு உரமேற்றிய மாணிக்கங் களான 130 புலவர்கள் - இந்த புலவர்களை தந்த மண்ணுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதீர்கள் என ஒலிவாங்கியில் குரல் ஒலிக்கிறது

இந்த குரல் ஒலித்த நேரத்தில், ~தலைவரே! எங்கள் முடிவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்@ பொற்கிழியை தக்கவைத் துக்கொள்கிறோம் என கண்ணியமாக பதிலளித் தனர் பொற்கிழி வாங்கி யோர். பல்லாயிரக் கணக் கானோரால் நிரம்பி வழிந்த அரங்கமே தக்பீர் முழக் கத்தால் அதிர்ந்தது.

நிமிடப் பேச்சில் கோபப் பட்டவர்களையும் சந்தோ ஷத்துடன் சம்மதிக்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒரு பொதுக்குழு கூட்டம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென, ~நான் வெளி நடப்புச் செய்கிறேன் என்ற ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி ஏன் என்கின்றனர் கூட்டத்தினர்.

~~தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்று பார்வையிட்டுள் ளனர். ஆனால், எங்கள் கூத்தாநல்லூரை அவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவேதான், இந்த வெளி நடப்பு என பதில் சொல்கிறார் வெளிநடப்பு செய்ய இருந்தவர்.

கூட்டத்தில் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர் நிதானமாக பதில் சொன் னார், ~பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றவர்கள் முஸ்லிம் லீகின் தலைவர்கள்தான்@ கூத்தாநல்லூரிலேயே முஸ்லிம் லீகில் மிகப் பெரிய தலைவர் சாரண பாஸ் கரனார் இருக்கும்போது நாங்கள் செல்வது அவ்வளவு சரியாக இருக்குமா? என கேட்டார்.

பொதுக்குழு கூட்டம் மட்டுமல்ல. வெளிநடப்பு செய்ய இருந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கர னாரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார். அந்தக் கூட்டத்தின் தலைமைப்பீடத்தை அலங் கரித்தவர் யார் தெரியுமா?
இப்படி மக்கள் மன்றம், கட்சிக் கூட்டம் என்று மட்டும் இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு நாள்...

~~எங்கள் முழு சக்தியை யும் திரட்டி இதை எதிர்க் கிறோம் என பேசுகிறார்... ஆளும் வரிசையில் அத்தனை பேரும் வாய்விட்டு சிரிக் கின்றனர். அவர்கள் சிரிப்பதற்கு காரணம்... அன்று சட்ட மன்றத்தில் முஸ்லிம் லீகிற்கு இரண்டே உறுப் பினர்கள்தான்! முழு சக்தி என்றதும் சிரித்தனர். சட்டமன்றத்தில் பேசிய வர் என்ன பதில் சொன் னார் தெரியுமா?

சிரிக்காதீர்கள் - சிரிக்க வைக்கப்படுவீர்கள்!

இந்த ஒரு வார்த்தை யைக் கேட்டு சட்டமன்றம் நிசப்தமானது. சிரித்தவர் களின் நாடி நரம்புகள் அடங்கின. கொஞ்ச நாட்களில் சிரித்தவர்கள் சிரிக்க வைக்கப்பட்டது நடக்கத்தான் செய்தது.

சட்ட சபையை ~நிசப்த மாக்கியது யார் தெரியுமா?...
இப்படி பட்டியல் போட் டுக்கொண்டே போகலாம்.

சட்டசபையில் முழங் கியவர், பொதுக்குழுவில் தலை மைப் பீடத்தை அலங்கரித்தவர் - உலகத் தமிழ் மாநாட்டில் பொற் கிழியை தக்க வைக்கச் செய்தவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்கள்தான்.

அவர் தலைமை ஏற்றால் சபை அலங்காரம் பெறும். அவர் நாவசைந்தால் தமிழ் நளினமாடும். அருள் மறை குர்ஆனுக்கு முதன் முதலில் தமிழில் விளக்கவுரை எழுதிய அல்லாமா அப்துல் ஹமீது பாகவி - ஜெய்னப் பீவி தம்பதியருக்கு 1926 அக்டோபர் 4இல் பிறந்தவர் சிராஜுல் மில்லத்.
அப்துஸ்ஸமத் தேவைகளற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயரைத்தான் தன்பிள்ளைக்கு சூட்டி மகிழ்ந்தார் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி!
சிராஜுல் மில்லத் சமுதாயம் தன் தேவை களுக்காக இவரை தலைமை பீடத்தில் அமர வைத்த போது சமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற பொருள் நிறைந்த பட்டத்தை சூட்டியது.

சிந்தனைச் செம்மல் தமிழ் கொஞ்சி விளை யாடிய அந்த நாவுக்கரசரை தமிழ், கூரும் நல்லுலகம் இப்படி அழைத்த போது - கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர்
பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்குவதில்லை வார்த் தைகளை தொடங்குவார் அதில் வரலாறு வலம் வரும் கருத்துக்கள் ஊற்றெடுக் கும். அவர் சாதனைகளை சொல்லிக் காட்டும்போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்.

அவர் மகிழ்வை பரிமா றும்போது ஹபுளகாங்கித மடைவார்
என்ன அற்புதமான வார்த்தைகள்!

அறிஞர் அண்ணாவுக்கு இது நூற்றாண்டு!

அவரே இவரது தமிழுக்கு ரசிகர்.
ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசிக் கொண்டிருந்த போது அண்ணா மேடைக்கு வந்தார் இவர் பேச்சை முடிக்கச் சொன்னார்கள் - முடித்தார்.
ஒலிவாங்கி முன் அண்ணா வந்தார் நான் இங்கே பேசவரவில்லை@ அப்துஸ் ஸமதின் பேச்சை கேட்கத்தான் வந்தேன் பேசட்டும் என்றார் - இவர் பேசி முடித்த பின்தான் அண்ணா பேசினார்.

அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் திருமணம்..... தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்று சிறப்பித்தனர்
வரவேற்றுப் பேசிய அண்ணா சொன்னார் - இங்கு ஏராளமான சொல் லாளர்கள் வந்துள்ளீர்கள், எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்க நேரமில்லை உங்கள் அனைவர் சார்பாகவும் என் அன்புத் தம்பி மட்டுமே வாழ்த்திப் பேசுவார் என்றார்.

வந்திருந்த அனைவரும் நாவலரா, கலைஞரா என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பட்டென அழைத்தார் - அப்துஸ் ஸமத் என்று! இவரது இதழியல் வரலாறு இருபத்தெட்டாம் வயதில் மணிவிளக்கு மாத இதழில் தொடங்கி மணிச் சுடர் வார இதழ், அறமுரசு நாளிதழ், கிரஸண்ட் ஆங்கில இதழ், மணிச்சுடர் நாளிதழ் என விரிவடைந் தது.

அவற்றில் எழுதப்பட்ட ஆக்கங்களெல்லாம் வார்த் தைகளல்ல - வைரவரிகள் - சிந்தனைக் களஞ்சியங்கள்!

இவர் அரசியலில் ராஜ தந்திரி
1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் துறைமுகம் வட்டத்தி லிருந்து முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டுதான் கண்ணியத்தின் காவலர் காயிதே மில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால்தான் 1962இல் தி.மு.க. வுடன் முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட்டது.

1975இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் அதை எதிர்த்த காரணத்தால் 1976இல் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.கவினர் தொல்லை களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

1977இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜனசங்கம், லோக்தளம் ஆகியகட்சிகளை இணைத்து ஜனதாவை துவக்கினார். அது வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

மொரார்ஜிக்கும், துணை பிரதமர் சரண்சிங்கிற்கும் ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்றம் கலைக் கப்பட்டு 1980 ஜனவரியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸோடு தி.மு.க. விற்கு தோழமை ஏற்படுத்த இவர் முயற்சி மேற் கொண்டார். கலைஞரின் சம்மதத்தை பெற்று அவரது தூதுவராகவே டெல்லி சென்று இந்திரா அம்மை யாரை சம்மதிக்க வைத்தார்.

இந்திரா தமிழகம் வந் தார். ஒரே மேடையில் இந்திரா- கலைஞர் - அப்துஸ் ஸமத்!

ஹநேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக! - கலைஞர் அழைக்க, இந்திரா உரையாற்ற புன்னகை பூத்த முகத்தோடு இவர் பார்த்து மகிழ்ந்தார்.

டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந் தபோது, இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள்...... 1990இல் டாக்டரை சந்தித்த இவர், சங்கம் நடத்தி சமூக பிரச்சனைக்காக சாலையில் இறங்கும் நீங்கள், கட்சி நடத்தி சட்டமன்ற நாடாளு மன்றங்களில் காரியம் சாதிக்கலாமே என ஆலோ சனை வழங்கினார்.

அதுவரை அரசியலே கூடாது என்ற நிலைப் பாட்டில் இருந்த டாக்டர் ராமதாஸ், சிந்திக்க தலைப் பட்டார்@ அதன் விளைவு தான் பாட்டாளி மக்கள் கட்சி! 1991 ஜூனில் நடை பெற்ற தேர்தலில் இக்கட் சியுடன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டு 18 இடங்களில் போட்டி யிட்டது. அதில் திருச்செந் தூர் தொகுதியில் நான் வேட்பாளன்.

கால் நூற்றாண்டு காலம் இவரது நிழலில் பவனி வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு என் போன்றோர் செல்லப்பிள்ளைகள்.
எங்களை பேச விட்டு ஆசை பார்ப்பார்!
அவரோடு நாங்கள் ஒன்றாக பயணிப்பதில் ஆர்வம் கொள்வார்.
1975இல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதான் இளைஞர் முஸ்லிம் லீகிற்கு சட்டப்படி யான அங்கீகாரம் கிடைத்து, செங்கம் ஜப்பார் மாநில பொதுச் செயலாள ராகவும், நான் மாநில பொருளாள ராகவும் தேர்வு செய்யப் பட்டோம். இளைஞர் முஸ்லிம் லீகை பலரும் எதிர்த்த நேரத்தில் அடுத்த தலை முறை தயாராகட்டும் என உற்சாகப் படுத்தியவர்.

1994இல் நான் சிறையி லிருக்கும்போது அவர் கைப்பட எழுதிய இருபக்க கடிதம் நான் இன்றைக்கும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம். அதிலுள்ள வரிகள் பலித்துவிட்டது. அவர் கேட்ட பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான்... அவர் வளர்த்து பாது காத்த வரலாற்றுப் பேரியக்கத்தில் கொள்கை பரப்புச் செயலாளனாக பணி செய்யும் பேற்றினை பெற்றுள்ளேன்.
அவர் ஆசை ஆசையாக எழுதிய மணிச்சுடர் நாளி தழில் நான் அமர்ந்து, எழுதும் பாக்கியத்தை பெற்றுள்ளேன்.

அவர் நல்ல தொண்டர் களை மட்டும் உருவாக்க வில்லை. அந்த தொண் டர்களை வழிநடத்த நல்ல தலைவரையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை முனீருல் மில்லத் தலைமையில் நாங்கள் சமுதாயப் பணி தொடரும்போது ஒவ்வோர் அடியிலும் சிராஜுல் மில்லத் வழிகாட்டுதல் இருந்து கொண்டேயிருக் கிறது.

ஆம்! அவர் அணையா விளக்கு! சமுதாயத்தின் மணிச்சுடர்!

Share this