Breaking News

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி லால்பேட்டையில் கடையடைப்பு

நிர்வாகி
0
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி லால்பேட்டையில் முஸ்லிம்கள் கடை யடைப்பு நடத்தினர்.சிதம் பரத்தில் த.மு.மு.க.வினர் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணி

பாபர் மசூதி இருந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க.வினர் சிதம்பரத்தில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு த.மு.மு.க.தலைவர் ஜவாஹி ருல்லா தலைமை தாங்கி னார்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டு மேலவீதி வழியாக சென்று வடக்குவீதி தலைமை தபால் நிலையத்தை வந்தடைந் தனர்.

ஆர்ப்பாட்டம்

அங்கு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.மாநில துணை செயலாளர் ஜின்னா, மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மெஹ்ராஜ் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அமீர்பாஷா, மாவட்ட துணை தலைவர் மதார்சா, துணை செயலாளர்கள் மன்சூர், யாசர் அராபத், மெகராஜுதீன், அமானுல்லா, அஷ்ரப் அலி, ஜவகர், நகர நிர்வாகிகள் இஸ்மாயில், ஜாகீர்உசேன், தாஜுதீன், முகமது ரியாஸ், கலீல், அல்தாப் உசேன், அப்துல் ஹமீத், ஜமால்உசேன், லியாகத் அலி, முபாரக் அலி, கபீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் மேற்பார்வையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மூவேந்தன் தலைமையில் 150-க்கும் மேற் பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.நடராஜர் கோவில் 4 வீதி களிலும் போலீசார் குவிக் கப் பட்டு இருந்தனர்.

கடையடைப்பு

லால்பேட்டையில் ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்புநாள் அன்று கடை யடைப்பு நடக்கும்.அதேபோல் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று லால்பேட்டையில் கடையடைப்பு நடந்தது.அதையடுத்துகாயிதே மில்லத் சாலை, கடைவீதி, கைக்காட்டி, சிங்கார வீதி உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப் பட்டது.அதேபோல் கொள்ளு மேடு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. கடையடைப்பும் நடத்தப்ப ட்டது.இதனால் கடைவீதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.

Tags: கடை அடைப்பு லால்பேட்டை

Share this