Breaking News

வக்பு வாரிய மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கு 20 ஆண்டுகள் என்ற நிபந்தனையை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

நிர்வாகி
0
வக்பு வாரியமூலம் ஓய்வூதியம் பெற 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளி வாசல் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


பள்ளிவாசல் பணியாளர்கள்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த திருவதிகையில் உள்ள ஷேக் இப்ராஹிம் ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் தமிழ்நாடு பள்ளி வாசல் பணியாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி வாசல் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நெய்வேலி ஷேக் முகமது காசின் தலைமை தாங்கினார். சாதுல்லாகான் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜாமியே அலாவுதின் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் முகமது இக்சானுல்லாஹா, சாதிக் அலி ஆகியோர் கிராக் ஓதினர். வக்பு ஆய்வாளர் முஸ்தபா உலமா, சந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் ஷேக் அப்துல் காதர், மாநில துணைத் தலைவர் ஷேக் முகமது காசின் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட முக்கிய தீர்மானமாவது:-

*ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு பள்ளி வாசல் பணியாளர்கள் சங்கம் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.

*விலைவாசி உயர்வு, வாழ்க்கை நிலை இவற்றை கணக்கில் கொண்டு மோதி னார்கள், உலாமாக்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல் உலாமா பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டுவது.

*வக்பு வாரியம் மூலம் ஓய்வூதியம் பெறுவதற்கு 20 ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை தளர்த்தி நல வாரியத்தை போன்று 5 ஆண்டுகளாக தமிழக அரசு குறைக்க வேண்டும். என கேட்டுக் கொள்வது.
*தமிழக பள்ளி வாசல்களில் பணிபுரிகின்ற பிற மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாத நிலையில் இருப்பவருக்கு இருப்பிட சான்று அளித்து உலமா நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நன்றி: தினத்தந்தி

Share this