Breaking News

உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி எயிட்ஸ்.

நிர்வாகி
0
ஏகஇறைவனின் திருப்பெயரால்....



அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும் . என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்.
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்று உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொடிய உயிர்கொல்லி எயிட்ஸ் எனும் தொற்று நோய் முதன் முதலில் 1981ல் அமெரிக்காவில் ஒருவரைத் தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.

அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டும் முடியாமல் போகவே உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் அசுர வேகத்தில் அமெரிக்காவின் மூலை, முடுக்குகளில் பரவத் தொடங்கியது.

அது முதல் இதுவரை அதற்கான மருந்தை கண்டுப் பிடிப்பதற்காக அமெரிக்காவுடன் உலக மருத்துவக் குழு முயற்சித்தும் முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றது.

இது முறையற்றப் பாலுறவின் பல வழிகளில் தொற்றுகிறது என்றும் இது தொற்று நோய் என்பதால் அதிகபட்சம் மேற்காணும் விலைமாதர்கள் மூலமே இதுப்பரவுகிறது என்றும், தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விடாது துரத்தும் என்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் அமெரிக்காவில் பரவிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்து அமெரிக்காவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு கடைவிரிக்கப்பட்டிருக்கும் விபச்சாரத்தில் விழாமல் கவனத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கு சென்று திரும்புபவர்கள் மிக கவனமாக திரும்பினாலும், அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் ஒன்றிரண்டுப் பேர் மூலமாக இக்கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அமெரிக்காவிற்கு வெளியிலும் பரவத் தொடங்கியது.

1981ல் அமெரிக்காவில் மட்டும் கண்டுபடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி இன்று உலகின் ( விபச்சாரம் அனுமதிக்கப்படாத நாடுகளைத் தவிற ) பெரும்பாலான நாடுகளில் புற்றீசல்கள் போல் பெருகி விட்டனர்.

இக்கொடிய உயிர்கொல்லி நோய் தொற்று நோயாகவும் இருப்பதால் முறையற்றப் பாலுறவில் ஈடுபடும் சேடிஸ்டுகள் மட்டுமல்லாமல் இதில் அறவே சம்மந்தப் படாத எண்ணிலடங்கா அப்பாவிகளையும், குழந்தைகளையும் கூட காவு கொண்டிருக்கின்றது.

இக்கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் கவலை அடைந்த உலக சுதாதார மையம் ( W H O ) (The World AIDS Campaign) தொடர்ந்து உலகம் முழுவதிலும் கீழ்காணும் தலைப்புகளில்.
 
Ø எயிட்சும், இளைஞர்களும்,



Ø எயிட்சும், பெண்களும்,


Ø எயிட்சும், குடும்பமும்,


Ø எயிட்சும், குழந்தைகளும்,


Ø பெண்களும், எச்.ஜ.வி யும்,


Ø சவாலை எதிர் கொள்,


Ø சமூகத்தின் ஈடுபாடு.Ø உரிமைகளும், பொறுப்புகளும்,


Ø ஒரு உலகம், ஒரு நம்பிக்கை,


Ø மாற்றத்திற்கான சக்தி,


Ø செவி கொடு, கற்றுக் கொள்,


Ø எயிட்சை மாற்றும் சக்தி,


Ø நான் பாதுகாப்புடன் நீ ?


Ø எயிட்ஸை நிருத்து சத்தியத்தைக் காப்பாற்று,
போன்ற இன்னும் பல தலைப்புகளில் 1988 லிருந்து 2010 வரையிலும் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை சடவடையாமல் நடத்திக் கொண்டிருக்கின்றது. http://www.worldaidscampaign.org/ இவ்வேளையில்
 
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதிலிமிருந்து குவியவிருக்கும் பணக்கார ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக 40 ஆயிரம் விலைமாதர்கள் அங்கு குவிக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டெய்லி நியூஸ்; கூறுவதாக தினகரன் 10-03-2010 கூறுகிறது. ஓருப்பக்கம் எயிட்ஸின் தீமைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை உலக சுகாதார மையங்களும், தண்ணார்வ அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 16சதவிகிதம் எயிட்ஸ் நோயாளிகள் நிறைந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு 40ஆயிரம் விலை மாதர்களை அனுப்பவிருக்கும் விபரீத முடிவை நாட்டு மக்களின் ஆரோக்கியம் கருதி தென்னாப்பிரிக்க அரசு முணைப்புடன் தடுத்து நிருத்த முன்வர வேண்டும்.


விலை மாதர்கள் அனுப்புவது நிருத்தப்பட வில்லை என்றால் உலக கோப்பை கால்பந்து போட்டியை தடை செய்வோம் என்று அறிவிக்க வேண்டும்.

இந்த போட்டிகள் நடத்தப்படும் நாடுகளே அதிகபட்சம் கப்புகளை வாங்கிக் குவிக்கும் அதனால் ஒரு சில நாட்கள் அந்த நாட்டின் வீர, தீர விளையாட்டுக்களைப் பற்றி உலகம் பேசும்.

அது அந்த ஓண்றிரெண்டு நாட்கள் மட்டும் பேசப்பட்டு முடிந்துவிடும் ஆனால் அங்கு பரப்பப்பட்ட கொடிய உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் ஒருவர் மற்றொருவர் மூலமாக பரப்பி அதனால் நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் சிறிது, சிறிதாக அப்பாவி மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் ஆஹா, ஓஹோ வென்று உலகம் புகழுகின்ற வெறும் புகழை நாட்டுக்கு சேர்க்க தென்னாப்பிரிக்க அரசு விரும்புகின்றதா ?

அல்லது

கொடிய உயிர் கொல்லி எயிடஸ் தொற்று நோயினால் சிறிது சிறிதாக மண்ணின் மைந்தர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் மரணத்தை விரும்புகின்றதா ?

உலக சுதாதார மையமோ, தண்ணார்வ அமைப்புகளோ இதில் தலையிட்டு தடுத்து நிருத்த முடியாது அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதைத் தடுத்து நிருத்தும் சக்தி தென்னாப்பிரிக்க அரசிடம் உள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துக் குவியும் ஓரிடத்திற்கு இப்படி ஒரு ஈனச்செயலை வருடந்தோறும் செய்து இன்னும் எயிட்ஸ் பரவாதப் பகுதிகளுக்கும் பரவச் செய்யும் நோக்கில் இந்த சேடிஸ்டுகள் செயல்படுவதால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களும் இதற்கு எதிராக களம் இறங்க வேண்டும்.

விளையாட்டு விளையாட்டாக இருக்கும் வரை விளையாட்டுக்கு இஸ்லாம் தடையாக இருக்காது வீர விளையாட்டுகளுக்கும், உடற்பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

அபிசீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்களை விட்டு விடுங்கள் அபீசீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்! என்று கூறினார்கள். 988. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
 
நல்லோர்களின் நடுநிலையாளர்களின் கவனத்திற்கு.
Ø ஏற்கனவே இந்த விளையாட்டுக்களில் சூது கோலோச்சிக் கொண்டிருக்கின்றது, ஒவ்வொரு அணியினர் மீதும் கோடிக்கணக்கானத் தொகை பந்தயமாக கட்டப்படுகின்றது.
Ø விளையாட்டு வீரரகளில் சிலர் இரகசியமாக ஊக்க மருந்துகளை உட்கொண்டு உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி இயற்கைக்குப் புறம்பான மோசடியில் ஈடுபட்டு தானும் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு, சூதாடிகளுக்கும் கோடிக் கணக்கில் ஈட்டிக் கொடுக்கின்றனர்.
Ø சில பிளேயர்கள் பணத்திற்காக, இன்னும் பல நோக்கத்திற்காக திறமை இருந்தும் வேண்டுமென்றே சொதப்பி நாட்டை தலைகுணியச் செய்யும் துரோகிகளாக மாறியும், மாறிக் கொண்டுமிருக்கின்றனர்.
Ø இன்னும் இதில் மதம் புகுத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் மதவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் விளையாடும் ஆடுகளம் கொத்தி சிதைக்கப்பட்டிருக்கின்றது,
 
உலகம் கண்டு களிக்கும் இந்த விளையாட்டுக்களில் புகுந்துவிட்ட மேல்படி தீமைகளை களைவதுடன், பலநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களின் ஆரோக்கியம் கெட்டு, தாய் நாட்டில் பிறருக்கும் பரவச் செய்யும் எயிட்ஸ் வைரஸ் கிருமிகளைப் பரப்பும் விபச்சாரம் தடுத்து நிருத்தப் பட்டால் தீமைக்கு அஞ்சும் மக்களும் அச்சம் தவிர்ந்து கண்டு களிக்கும் நிலை உருவாகலாம்.



இல்லையேல் தீமைக்கு அஞ்சும் நன்மக்கள் இதை வெறுத்து ஒதுங்கட்டும், பிறருக்கும் இதில் புகுந்து விட்டத் தீமைகளை விளக்கிக் கூறித் தடுக்கட்டும். நமக்கென்ன என்று விட்டு விட்டால் நமக்கும் இதுத் தொற்றும் அபாயம் உள்ளது.


1400 வருடங்களுக்கு முன் எளிய நடையில் உலக மாந்தர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கீழகாணுமாறு விளக்கிக் கூறினார்கள்.


அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும்இ இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போதுஇ கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்இ நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று அறிவின் பொக்கிஷம் அன்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரிஇ திர்மிதீ)وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
நன்றி:  அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்.

Share this