Breaking News

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில்; தலைவர் பேராசிரியர் பேச்சு

நிர்வாகி
0
அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன்றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத்தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.

பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.

கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.

முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக்கும் பாணி.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கினோம்.

முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர். அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.

முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணியில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத்திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.

 நன்றி: முதுவை ஹிதாயத்

Share this