Breaking News

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்

நிர்வாகி
0
கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டை மைதானத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் மாவட் டத் தலைவர் எஸ்.எம். காசிம் தலைமை யில் மாநிலத் துணைத் தலைவர் எல்.எம். அப்துல் ஜலீல் கோவை மண்டல இளை ஞர் அணி அமைப் பாளர் பி. முஹம்மது பஷீர், மாநகராட்சி உறுப்பினர் மெஹருன்னிசா சாகுல் ஹமீது ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் டி.ஏ. அப்துல் நாசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், கோவை மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். உசைன், செயலாளர் ஏ.என். அசன்பாபு, திருப்ப+ர் மாவட்டத் தலைவர் பி. ஹம்சா, செயலாளர் மங்களம் அக்பர் அலி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட்டதாவது-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது. இம் மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி வர வேற்கிறது. இம் மாநாட்டிற்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இம் மாநாட்டில் சமுதாயத்தினர் பெருமளவில் பங்குபெற வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சரித்திரத்தில் மிகச் சிறந்த உலக மாநாடுகளில் ஒன்றாக நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அந்த சிறப்புக்களில் ஒன்றாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வரலாற்று அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

யாரும் சிறை செல்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எந்த ஒரு கால கட்டத்திலும் காரணமாக இருந்ததில்லை. அதை ஊக்குவித்ததும் இல்லை. அப்படிப்பட்ட செயலை தூண்டிவிட்டதும் இல்லை. இன்று சிறையில் இருப்போர் யாருடைய தூண்டுதலால் அல்லது உணர்ச்சிவசத்துக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அவர்களுடைய விடுதலைக்கு இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் குரல் கொடுக்கிறது அவசரப்பட்டு தூர நோக்கு பார்வையில்லாமல் எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்களை செய்யக் கூடியவர்களின் அழைப்புகளில் தடுமாறி விழுந்து இன்று நிர்க்கதியாகி சிறைக் கொட்டடிகளில் தங்கள் காலக் கிரகத்தை அனுபவிப்பதோடு அவர்களுடைய குடும்பங்களையெல்லாம் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.

இந்த துன்பமும், துயரமும் தொடர் கதையாகிக் கொண்டே போகக்கூடாது என்பதற்காக சிறைவாசிகளுடைய விடுதலைக்கு தாய்ச்சபை குரல் கொடுத்தது. வரலாறு படைத்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் கலைஞர் முன்னிலையில் நம் தலைவர் பேராசிரியர் முன்வைத்த கோரிக்கையின் காரணத்தால் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை பெற்றனர். தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். கருணையின் அடிப்படையில் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

குணங்குடி ஹனீபா விடுதலை

13 ஆண்டு காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் கலைஞரையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு சந்தித்தது. அவர்களும் சில சமிக்கைகளை தெரிவித்தார்கள். அந்த தகவல்கள் எல்லாம் குணங்குடி ஹனீபாவின் குடும்பத்தாருக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையால் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும் குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை எங்களைப் போல் தெரிந்து கொண்டவர்கள், தீர்ப்பு வெளியாகும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிமன்ற முற்றுகை என ஒரு போராட்டத்தை அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள். விளம்பரத்தின் வெளிச்சமே இல்லாமல் அந்த விளம்பரத்தின் மூலம் சொந்த ஆதாயத்தை எதிர்பார்க்காமல் தாய்ச்சபை செயல் படுகின்ற போது விளம்பரத்தை மட்டுமே முன்னி லைப்படுத்தி வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதை என்ன சொல்வது?

நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று என்று சாதாரண சாமானியர்கள் அறிவார்கள். அந்த ஆர்ப்பாட் டத்தை நடத்திய தலைவர்களுக்கும் இது தெரியும். ஆனால், மற்றவர்களை யெல்லாம் செயல்படா தவர்கள் என்றும், தாங்கள் மட்டும்தான் போராடக் கூடியவர்கள் என்றும் விளம்பரம் செய்வதற்காக இந்த விடுதலையை பயன் படுத்திக் கொண்டார்கள். எண்ணற்ற இளைஞர்கள் அநியாயமாக சிறை செல்வதற்கு யார் காரணம்? என்பதற்கும், அவர்கள் சிறை புகுந்ததால் யாருக்கு ஆதாயம் என்பதும் இந்த சமுதாயத்துக்கு நன்கு தெரிந்ததே.

சிறைவாசிகள் குடும்பம் சந்திப்பு

இன்று கோவை வந்த நான் சிறைவாசிகளுடைய குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் கண்கலங்கிய காட்சி எங்கள் சகோதரன் வெளியின் வந்தால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என சிறை வாசிகளின் சகோதரிகள் செய்த உறுதி அவர்கள் படுகின்ற துயரங்கள் அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். ஆறுதல் கூறுவதுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்ட வர்களின் நலனுக் கான இன்று நாங்கள் பாடுபடுகிறோம்.

ஆயுள் சிறைவாசியாக இருக்கும் இளைஞர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமத் தில் சிறையில் இருந்தார். அபுதாஹிர் என்று அந்த இளைஞருக்கு 3 பரோல் விடுப்புகளுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல சிறைவாசிகளுடைய பரோல் விடுப்புகளுக்கும் நாங்கள் முயற்சி செய்துள் ளோம். இவைகளையெல் லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சாதி அரசி யல் நடத்தக் கூடிய இயக் கம் அல்ல. இஸ்லாம் வழி நடத்துகின்ற மனித நேயம், சமூக நல்லிணக்கம், நம்மு டைய கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் இவைகளை லட்சியமாக கொண்டுதான் செயல்படு கிறது. மத துவேஷங்களை உருவாக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்வதில்லை. பேசுவதும் இல்லை. மத துவேஷத்தை வளர்க்கின்ற வகையில் முஸ்லிம்கள் கடையில் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சொல்லப் பட்டபோது கூட, அதற்கான பதிலை அவர்கள் பாணியில் சொல் லாமல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நாம் பிரச்சாரம் செய்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்ற பணியில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு எம். அப்துர்ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.

ஆரம்பமாக குனிய முத்தூர் இமாம் அப்துல் ரஹ்மான் ஜமாலி இறை மறை ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம். இப்ராஹீம் நன்றி கூறினார்.

Tags: அப்துல் ரஹ்மான் எம்.பி முஸ்லிம் லீக்

Share this