Breaking News

8 ஆண்டுகளாக ஒரே வண்டியுடன் வசதிகளின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம்

பக்கர்Brothers.kollumedu
0

அடிப்படை வசதியின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் கடந்த 92ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக அலுவலக கட்டடம், ஒயர்லஸ் கட்டடம், ஓய்வு அறை, எழுத்தர் அறை என்று நான்கு தடுப்பு சுவர் கொண்ட கட்டடத்தில் பெயரளவுக்கு ஆஷ் பெஸ்டாஸ் ஷீட்போடப்பட்டுள்ளது. ஓட்டை உள்ள இடங்களின் சம்மந்தட்டிகளைக் கொண்டு மறைத்துள்ளனர். வெயிலின் கொடுமைக்கும் மழையின் தூறலுக்கும் பயந்து தீயணைப்பு வண்டிக்கு அடியில் அமர்ந்து தனது எழுத் துப்பணிகளை கவனித்து வருகின்றனர். 17 பேர் பணிபுரியும் தீயணைப்பு துறையினரின் ஓய்வு அறையும் மோசமான நிலையில் உள்ளது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் 18 ஆண்டுகளாக ஒரே ஒரு தீயணைப்பு வண்டி தான் உள்ளது. அதுவும் அடிக்கடி மக்கர் செய்து விடுவதால் அதை சீரமைக்கவே தீயணைப்பு படையினர் படாத பாடுபடுகின்றனர். ஆயிரம் காலன் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு வண்டிக்கு தண்ணீர் பிடிக்க படாதபாடுபடுகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கக் கூடிய வகையில் நீர் வெளியேற்று குழாய் அமைக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் பலமுறை முறையிட்டும் பலனில்லாமல் தற்போது சர்க்கரை ஆலையில் உள்ள தரை கிணற்றுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் தேவையான வசதிகளை தற்போது இருக்கும் இடத்திலேயே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share this