Breaking News

முஸ்லிம்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி

நிர்வாகி
0
மக்கள் தொகைக் கணக் கெடுப்புக்குப் பின்னர் முஸ்லிம்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இடஒதுக் கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச்செயல ரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.


ஈரோட்டில் நிருபர்களி டம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் உறுப் பினர்களைச் சேர்த்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தேர்தல்களை நடத்தும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளோம். பின்னர், தேசிய அளவி லான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சியைப் பிடிப் பதோ, எதிர்க்கட்சியாவ தோ இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் அல்ல. ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், முஸ்லிம் களின் தனித்தன்மையைக் காப்பதே எங்கள் குறிக் கோள். முஸ்லிம்களின் கலாசாரம், பண்பாடு, மரபு, உரிமைகளைப் பாதுகாக் கவே நாங்கள் கட்சி நடத்து கிறோம்.

நாட்டில் எந்த வகையி லும் தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது. தீவிர வாதத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். தமி ழகத்தைப் பொறுத்தவரை எங்களது குறிக்கோள் களை நிறைவேற்றி, சிறு பான்மை மக்களைப் பாது காக்கும் திமுகவுடன் கூட் டணி வைத்துள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட் டணி தொடரும். ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஆதரவு திமுக வுக்குத்தான் உள்ளது.

தமிழ் மொழியின் தொன்மை, சிறப்புகளை உலகுக்கு உணர்த்தவும், தமிழின் வலிமையை உல கம் முழுவதும் எடுத்துச் செல்லவும் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பெரிதும் உதவும். எல்லோரும் ஒன்று கூடி மாநாட்டை நடத்த வேண்டுமென 11 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள், ஜமாஅத்து களில் பிரசாரம் செய்து வருகி றோம்.

முஸ்லிம் மக்களின் நலனுக்கான சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் முழுவதையும் அமல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அமல் படுத்த வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குப் பிறகு முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதி கரிக்க வேண்டும்.

ஷரீஅத் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திரு மணங்களை அரசு பதிவாக அங்கீகரிக்க வேண்டு மென்று கோரிக்கை விடுத் துள்ளோம். விரைவில், இதுதொடர்பாக அர சாணை வெளியிடப்படும் என நம்புகிறோம்.

ஆன்மிக அரங்கம்

உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு அளிக்கி றது. முதல்வர் கலைஞரின் முயற்சியால் நடைபெற உள்ள செம்மொழி மாநாடு உலக அளவில் தனி சிறப்பை பெறும்.

நாங்கள் செல்லும் இட மெல்லாம் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் மஸ்ஜித்களிலும் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.


செம்மொழி மாநாட் டில் இயல், இசை, நாடகம் மற்றும் அறிவியலுக்கு அரங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து ஆன்மிகத்துக்கும் அரங்கம் அமைக்க வேண் டும். ஒவ்வொரு மதமும் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தது என்பது பற்றி விளக்க அரங்கம் அமைக்க வேண்டும். இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

மாநில மார்க்க அணிச் செயலர் ஷபிகுர் ரகுமான், மாவட்டத் தலைவர் கலிபுல்லா, பொருளாளர் ஹபிபுர் ரகுமான் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags: முஸ்லிம் லீக்

Share this