திமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது, இது தொடரும்- தேசிய லீக் உறுதி
நிர்வாகி
0
திமுகவுடனான தேசிய லீக் கட்சியின் கூட்டணி தொடருகிறது. திமுகவுடன் நல்ல தோழமை உள்ளது. இது நீடிக்கும் என்று கூறியுள்ளார் தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது.
மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய பஷீர் அகமது,
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தீர்வு கிடைப்பதற்கு மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு மட்டுமே தீர்வாக அமையும். தமிழகத்தில் 3.5 லட்சம் ஹெக்டரில் நடந்த நெல் சாகுபடி, தண்ணீர் இல்லாததால் 54 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். தேசிய கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தண்ணீர் பிரச்னைகளில் இரட்டை வேடமிட்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்களின் நலன்களுக்காக அமைக்கப்பட்ட கமிஷன்கள் செயல்வடிவம் இல்லாமல் உள்ளன.
தமிழகத்தில் தேசிய லீக், தி.மு.க.,வுடன் தோழமையுடன் உள்ளது. இதே நிலை தான் தொடரும் என்று தெரிவித்தார்.

Tags: தேசிய லீக்