Breaking News

சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி உதவி

நிர்வாகி
0
மவுலானா ஆசாத் சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி உதவி


மத்திய அரசு சிறுபான்மையின மக்களில் ஏழை பெண் குழந்தைகள் படிக்க வேண்டி மவுலானா ஆசாத் பெயரில் மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் சிறுபான்மையின மாணவிகள் 692 பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.

இதில் இஸ்லாம்யியர்கள் 330 பேருக்கும், கிருஸ்துவர்கள் 360 பேருக்கும், சீக்கியர்-1, புத்தமதத்தினர்-1 என மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி 10ம் வகுப்பில் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற சிறுபான்மயினத்தைச் சார்ந்த மாணவிகள் இந்த நிதியுதவி பெற விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

இதற்கான விண்ணப்பிப்ப படிவம் http://www.maef.nic.in/  என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப படிவம் உள்ளது.

இதற்கு விண்ணப்படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி நாள் 20.8.2010.

Tags: நிதி உதவி

Share this