Breaking News

7 ஆண்டுகள் சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகள் உள்பட அனைத்து கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கி பேசினார். அப்போது கேரளாவில் ஒவ்வொரு வருடமும் சிறையில் 7 வருடம் கழித்த அனைத்து ஆயுள் கைதிகளும், கர்நாடகாவில் 8 வருடம் சிறையில் கழித்த ஆண்களும், 4 வருடம் சிறையில் கழித்த பெண்களும் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் அண்ணா பிறந்தநாள் அன்று 7 வருடம் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் உள்பட அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.



ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், பா.ம.க. மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஏ.கசாலி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப், எஸ்.எம்.ரபீக், ஏ.கே.முகமது அனீபா, முன்னாள் எம்.எல்.ஏ, எம்.ஜி.கே.நிஜாமுதீன், சி.ஆர்.பாஸ்கரன் உள்பட பலர் பேசினார்கள்.

Tags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Share this