Breaking News

லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் துபாய் வெள்ளி விழா

நிர்வாகி
0
லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் துபாய் யின் வெள்ளி விழா (25 ம் ஆண்டு) ஆண்டின் பொதுக்குழு கடந்த 04.02.2011 வெள்ளி மாலை மக்ரிபுக்கு பிறகு லால்பேட்டை மேல் மாடியில் மிக சிறப்பாக நடைபெற்றது.




துபாய், ஷார்ஜாஹ் விலிருந்து லால்பேட்டை ஜமா அத்தின் நண்பர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.அபுதாபி யிலிருந்தும், அல்ஐன் னிலிருந்தும் அழைப்பை ஏற்று திரளான நண்பர்கள் கலந்து கொண்டனர்.



சிறப்புப்பேச்சாளராக துபாய் சிங்கப்பூர் ஹவ் ஸின் உரிமையாளரான ஆயங்குடியை சேர்ந்த லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வாரில் படித்து பட்டம் பெற்ற மௌலானா மௌலவி PA ஜாபர் அலி மன்பஈ யன்பவுல் ஹைராத் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு அருமையான சொற்பொழிவை வழங்கினார்கள்.SM வாஜீது அவர்கள் முன் மொழிய, MH பஷீர் அவர்கள் வழி மொழிய VJ ஜாபர் அவர்கள் தலைமை ஏற்று ஜமா அத் கூட்டத்தை நடத்தினார்கள்.



கிராஅத் மௌலவி AJ இனாம் ஹுஸைன் அவர்கள் தன் இனிமையான குரலால் குர்ஆன் ஓதி தொடங்கி வைத்தார்கள். AMஜக்கரியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.



அபு தாபி லால்பேட்டை ஜமா அத்தின் தலைவர் மௌலவி MAஅமீனுல் ஹுஸைன் அவர்கள் ஒற்றுமையின் அவசியத்தை பற்றி பேசினர்கள்.



தர்மம் செய்பவர்கள் சொர்க்கத்தில் தன் பக்கத்தில் இருப்பார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வாக்கை மேற்கோள் காட்டி தர்மம் செய்வதன் அவசித்தை வலியுருத்தி பேசினார்கள்.



அடுத்ததாக பேசிய நண்பர் நஜிபுல்லாஹ் அவர்கள், ஒற்றுமையின் அவசியத்தை பற்றியும், லால்பேட்டை ஜமாஅத் துபாய் தொடக்கம் பற்றியும், ஜமா அத் தொடங்குவதற்கு முன்பே, அமைப்பாக நம் ஊரிலிருந்து துபாய் வரும் நண்பர்களை வரவேற்று, அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்து, உணவும் சிலவுக்கு பணமும் கொடுத்து அவர்கள் வேலை தேட ஏற்படுகளும் செய்து கொடுத்த ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தார்.



அடுத்ததாக பேசிய நண்பர் சுஹைபுதீன் அவர்கள் லால்பேடையின் தோற்றம், வளர்ச்சி பற்றி விபரமாக கூறினார்.24 நான்கு மணி நேர மருத்துவமனையின் அவசியம் பற்றியும், லால்பேட்டையில் ஒரு பஸ் ஸ்டாண்டு இல்லாததால் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விளக்கி பஸ் ஸ்டாண்டின் அவசியத்தையும் வலியுருத்தி பேசினார்.



பொன்னாடை போர்த்துதல்சிறப்புப் பேச்சாளரான மௌலானா மௌலவி PA ஜாபர் அலி மன்பஈ அவர்களுக்கு ஜனாப் PM பைஜ் அவர்களும்அபு தாபி லால்பேட்டை ஜமா அத்தின் தலைவர் மௌலவி MA அமீனுல் ஹுஸைன் அவர்களுக்கு RP பத்தாஹ் அவர்களும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் துபாய் யின் தலைவர் VJ ஜாபர் அவர்களுக்கு D வஜிஹுல்லாஹ் அவர்களும் பொன்னாடை போர்த்த பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.



உறுப்பினர் அடையாள அட்டை உறுப்பினர்களின் பெயர்களை TP தஸ்லீம் அவர்கள் வாசித்தழைக்க SE ஹாமீது அவர்கள் வழங்க லால்பேட்டை முஸ்லிம் ஜமா அத்தின் உறுப்பினர்களுக்கு போட்டோவுடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டை வழஙப்பட்டது.



சிறப்புரையை தொடங்கிய மௌலவி ஜாபர் அலி அவர்கள் லால்பேட்டை என்பது 5 எழுத்து ஆயங்குடி என்பது 5 எழுத்து, 5 எழுத்து 5 எழுத்தை எப்படி வாழ்த்துவது என்று திகைத்து நிற்கின்றேன் என்று தொடங்கி, லால்பேட்டையின் பெறுமைகளையும், ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பெறுமைகளையும் பண்புகளையும் அதன் ஹஜ்ரத்களின் பாடம் போதிக்கும் திறமைகளையும் மிக அழகாக எடுத்துக்கூறியதுடன்



மக்கத்து காபிர்களால் சொல்லொண்ணாத துன்பங்களை அனுபவித்து மக்கத்திலிருந்து மதினாவுக்கு விரட்டப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் மக்கள் திரளுடன் மக்கத்தை வெற்றி கொண்டு மக்கத்தில் நுழைந்த போது, எப்படி பழி தீர்ப்பார்களோ என்று பழி தீர்ப்பதையே வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த மக்கத்து காபிர்கள் பயந்து நடுங்கிய போது அவர்களை மன்னித்து, மக்கத்து மக்கள் தாங்கள் செய்த பழிபாவங்களுக்காக பழி வாங்கப்படமாட்டார்கள் என்ற நபி(ஸல்)யின் வார்த்தையை கேட்டு மன நிம்மதி அடைந்தது மட்டுமின்றி இப்படி ஒரு மன்னிப்பை வழங்கிய மார்க்கமே சிறந்ததாக இருக்கமுடியும் அப்படி ஒரு மன்னிப்பை வழங்கிய முஹம்மதே இறைவனின் நபி(ஸல்)யாக இருக்கமுடியும் என்று இஸ்லாத்தை ஏற்று கலிமா சொன்ன நிகழ்வை சொல்லி அன்று ஏராளமாக இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வை எடுத்துகாட்டி அருமையான ஒரு பயானை நிகழ்த்தினார்கள்.



A ஹுஸைன் அவர்கள் அழகாக நன்றியுரை வழங்க மௌலவி அபுல் கலாம் அவர்களின் துஆ வுடன் ஜமாஅத்தின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



லால்பேட்டையின் பரம்பரியமான விருந்து வந்திருந்த எல்லா நண்பர்களுக்கும் இனிதே வழங்கப்பட்டது

Tags: லால்பேட்டை

Share this