Breaking News

ஈகை திருநாள் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி!

நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் A.நூருல் அமீன் ஹஜ்ரத்'

அவர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி !
இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்
பெற்று வாழ வாழ்த்துகிறேன் ....."ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்" ....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்
பெருநாள் வாழ்த்து செய்தி !

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அன்பார்ந்த சகோதரர்கள் சகோதரிகள் உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஈதுல் பித்ர் இனிய` ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புனித ரமளானில் நோன்பின் மாண்பை பேணி,கண் சிவக்க திருக்குர்ஆன் ஓதி,கை சிவக்க வாரி வழங்கி ,கால் கடுக்க தொழுது வணங்கி புனித ரமளானை கண்ணியப்படுத்திய கண்ணியச்சீலர்களான உங்கள் அனைவர்களுக்கும் இனிய ஈத் முபாரக்

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்

பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

ரமளான் பெருநாளை யொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு-
தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளதையும் தூய் மைப்படுத்தும் நல்ல நோக்கத்துடன், ரமளான் மாதம் முழுவதிலும் நோன்பிருந்து ஈத்துவக்கும் இன்பப் பெருநாளாம் ரமளான் பெருநாளைக் கொண்டாடும் எல்லோருக்கும் ஈத் வாழ்த்துக்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது நோன்பின் இலட்சியமாகும்.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை வருத்து எடுக்கின்ற வறுமை பீடித்திருக்கிறது; பட்டினியும் பசியும் நீடிக்கிறது; பிணி யும் பீடையும் வாட்டுகிறது; இதனால் மனித நெறியோடு வாழவேண் டிய மக்களிடத்தில் நன்னெறி மறைந்து புன்னெறி தலை தூக்குகிறது. நன்னெறியின்பால் உலகம் செல்ல வேண்டு மெனில் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறை பக்தி நிறைய வேண்டும்; அன்பும் பாசமும் பரிவுணர்வும் பெருக வேண்டும்; நேய மும் ஈரமும் நெஞ்சில் நிரம்ப வேண்டும். இதற்கெல்லாம் மூலாதாரமாக உள்ள தனிமனித ஒழுக்கம், நேர்மை, வாய்மை, தூய்மை நிலை பெற வேண்டும்.

இன்றைக்கு நாட்டில் சிந்தனைத் தடுமாற்றமும், செயல்பாடுகளில் குழப்பமும் மலிந்து வருகிறது. இதற்கு மூல காரணி, எதைப்பற்றியும் தெளிவின்மையில் இருப்பதே ஆகும்.

இந்தியத் திருநாட்டில் இன்றுள்ள மக்களாட்சித் தத்துவம் மாட்சிமையுடையது. குறைகள் குறைவாகவும் நிறைகள் நிரம்பவும் உள்ளது இந்த ஜனநாயக முறை. இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் எல்லாத் தரப்பு மக்களும் உரிய முறையில் உரிமைகள் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு தொகுக் கப்பட்டு இந்திய அரசியல் சட்டமாக வழங்கப்பெற் றிருக்கிறது.

எல்லாத் தரப்பினரும் சம நீதியும், சமூக நீதியும், சமத்துவமும் பெற்று வாழ்வதற்கு இந்திய அரசியல் சட்டம் வழி வகுத்திருக் கிறது; அச்சட்டத்தின் அடிப்படையில் அமையும் ஜனநாயக அரசியலாட்சி முறையால்தான் இந்த சமத்துவ சமுதாயமும் சமயஞ் சாராத சமுதாயமும் உருவாக முடியும்.

இந்திய ஜனநாயகத்தை வலிமைப்படுத்தவும், வளப்படுத்தவும் வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையைச் சிறப்பாகச் செய்வ தற்கு எல்லோரும் ஒன்று படுவோம்! ஈத் முபாரக்!...

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதயங்கள் மலரட்டும்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சாந்தி மார்க்கமான இஸ்லாம் ஏந்தி நிற்கும் இரு பெருநாட்களில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் ஈகை நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதகுலம் நேர்வழி பெற இறைவேதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில், அம்மாதம் முழுவதும் நோன்பிருந்து இறை உணர்வில் திளைத்து ஏழைகளின் பசி உணர்ந்து, இறைவனை வணங்கி, ஏழைகளுக்கு வாரி வழங்கி, பிறை கண்டு ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், நாட்டோர் நலம் பெறவும், நல்லிணக்கம் மலர்ந்திடவும் விழைவோம்.

நம்நாட்டில் அடிப்படைத் தேவைகளே நிறைவேறாமல் ஏராளமானோர் வாழும் நிலையில் அவர்களின் வாட்டம் போக்க, வறுமையின் அவலம் நீக்க அனைவரும் அணி திரள்வோம். இறைவனை வணங்கும் மனதையும், இல்லாதோர்க்கு வழங்கும் குணத்தையும் மக்கள் மத்தியில் ஓங்கச் செய்வோம்.

மனிதநேயத்தை மங்க வைக்கும் பொறாமை, வஞ்சகம், பகையுணச்சி போன்ற தீய செயல்களிலிருந்து மனிதகுலம் விடுபட்டு, பொறுமை, ஈகை, அன்பு, சகோதரத்துவம் ஆகிய இறைவிருப்பமுள்ள பண்புகளை எல்லோரும் பெற பிரார்த்திப்போம்.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

Tags: வாழ்த்துக்கள்

Share this