Breaking News

மர்ஹபா சமூக நலப்பேரவைக்கு சிறந்த சமூக சேவைக்கான மகாத்மா காந்தி விருது ...!

நிர்வாகி
0
ஜீலை 27, புதுவை.


அமீரகத்தில் சேவைப் பணியில் 10 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்காக தமிழகம் தழுவிய அளவில் கல்வி,மருத்துவம்,திருமண உதவி, சிறு சுய தொழில் செய்ய உதவி, இரத்ததான முகாம் என பல தரப்பட்ட சேவை பணிகளை செய்து அனைவரின்அன்பையும்,
பாரட்டையும் பெற்று வரும் மர்ஹபா சமூக நலப்பேரவைக்கு 2019ல் தமிழகத்தில் இரண்டாம் விருது ..! அல்ஹம்துலில்லாஹ்!

மர்ஹபாவின் சேவையை கெளரவிக்கும் விதமாக அமெரிக்காவை சார்ந்த குளோபல் பீஸ் பல்கலைக்கழகத்தின் (Global Peace University-USA)சார்பாக மர்ஹபாவின் சமூக நலப்பணிகளை பாராட்டி

#பாண்டிச்சேரியில் 27.07.2019 சனிக்கிழமை அன்று லீ.ராயல் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைக்கான “மகாத்மா காந்தி” விருது வழங்கி கெளரவித்தனர்.

இவ் விருதினை சென்னை உயர் நீதிமன்ற முன்னால் நீதிபதி திரு.சுவாமிதுரை மற்றும் GAC ஆலோசகர் திரு.ஜான் பீட்டர் ஒஸ்போர்ன் ஜெர்மனி,அவர்களும் வழங்கி சிறப்பு செய்தனர்.

#விருதை_மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் N.முஹம்மது சித்திக், நிர்வாகி A.H நஜிர் அஹமது, லால்பேட்டை கூட்டுறவு சங்க தலைவரும், மர்ஹபாவின் கெளரவ ஆலோசகருமாகிய A.S.நஜிர் அஹமத், அபுதாபி மண்டல மர்ஹபா செயல் வீரர்கள் T.M. ஜாக்கீர் ஹூசேன், மெளலவி K.M. முஹம்மது ஹூசேன் மன்பஈ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினிமா நட்சத்திரங்களான நகைச்சுவை நடிகர் திரு.சின்னி ஜெயந்த், திரைப்பட இயக்குனரும், நடிகருமாகிய திரு.R.சுந்தர் ராஜன், ஜீவஜோதி அறக்கட்டளை நிறுவனர் திரு.ஜாக்கீர் ஹூசேன் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பட்ட சமூக ஆர்வலர்களும், சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்பணிக்கான உயரிய அங்கீகாரத்தை இறைவனிடத்தில் நாம் எதிர்பார்த்து களப்பணி ஆற்றிகொண்டிருக்கும்...அதே நேரத்தில்,

சக தோழர்கள், அறிஞர்கள், வல்லுனர்கள்,
பொது மக்கள் என அனைவரின் பாராட்டும் ! அன்பும் ! எம்மை மேலும் சமூக சேவையை புத்துணர்சியோடும் !இள இரத்தம் பாய்ச்சப்பட்ட உணர்வோடும் பணியாற்ற உந்துதல் கொடுக்கின்றது என்று சொன்னால் மிகையல்ல..!

எல்லா புகழும் இறைவனுக்கே...

(குறிப்பு :- கடந்த மே 5 2019 மதுரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மர்ஹபாவிற்கு சமூக சேவைக்காக “மேதகு APJ அப்துல் கலாம்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது .!

இவ்வாண்டில் மர்ஹபா சமூக நலப்பேரவைக்கு இது 2 வது விருது என்பது குறிப்பிடத்தக்கது )

இவ் விருதினை மர்ஹபா நலப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள்,நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ஆக்கமும் - ஊக்கமும் அளித்து வரும் நண்பர்கள், ஆதரவாளர்கள்,அன்பு எதிர்ப்பாளர்கள் என அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம் .

இங்ஙனம்

மர்ஹபா சமூக நலப்பேரவை

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this