Breaking News

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்குடன் தமிழக அரசியல் கட்சி குழுவினர் சந்திப்பு..

நிர்வாகி
0

கொழும்பு அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தமிழக அரசியல் கட்சி குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு தலைவர் கவிஞர் கனிமொழி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற குழு துணை தலைவர் இ.டி.முஹம்மது பஷீர் , நாடாளுமன்ற முஸ்லிம் லீக் கட்சி கொறடா கே. நவாஸ் கனி , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் முனைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட குழுவினர் இன்று (13-09-2019) காலை சந்தித்து பேசினர் .


இச்சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சனை, இலங்கை குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags: செய்திகள்

Share this