அமீரக மனிதநேய கலாச்சார பேரவை நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வு!
அமீரக மனிதநேய கலாச்சார பேரவை நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வு!
தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை சொந்தங்கள் ஷார்ஜா வின் 38 வது புத்தக கண்காட்சியில் ஒன்று கூடினர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் ஆலோசனையின் வேண்டுகோள் படி, தமிழ் பதிப்பாளர்களையும், படைப்பாளிகளையும் அமீரக மனிதநேய கலாச்சார பேரவையினர் ஊக்கப்படுத்தினர்.
புத்தக வாசிப்பை அமீரக வாழ் தமிழர்களிடம் எடுத்துச் செல்வதே இந்த ஒன்று கூடலின் நோக்கமாக இருந்தது.
நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும் .
உலகின் மிகச்சிறந்த அறிஞர்களுள் ஒருவரான மாஜினி,''என்னை கடல் கடந்து கூட அனுப்பிவிடுங்கள்; ஆனால் கையில் எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கொடுத்துவிடுங்கள்,'' என்றார். என்று புத்தகங்களின் மதிப்பை அடிக்கடி கூறிச்செல்வார், வாசிப்பு குறித்த மக்களிடையே நல்ல சிந்தனைகளை உருவாக்க முடியும் என்றும் வலியுறுத்துவார்.
அதன் அடிப்படையில் இந்த புத்த கண்காட்சியில் பயனுள்ளதாக அமைந்தது
இந்த ஒன்று கூடல் நிகழ்வில் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களுடன் புத்தகங்கள் குறித்தும். மனிதநேய கலாச்சார பேரவையின் சமூக நலப்பணிகள் குறித்தும் உரையாடி மகிழ்ந்தோம்.
இந்நிகழ்வில் மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயலாலர் மதுக்கூர் S. அப்துல் காதர். அமீரக பொருலாளர் H.அபுல் அசன்B.com. துபாய் செயலாளர் B.ரஹமத்துல்லா B,Sc,.துபாய் பொருலாளர் V.ஷபீக்குர்ரஹ்மான் BBA மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்,
மனிதநேய கலாச்சார பேரவை
துபாய் மாநகரம்.அமீரகம்
Tags: உலக செய்திகள்