Breaking News

துபாய்MKPசார்பாகஇரத்ததானமுகாம்

நிர்வாகி
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது இம்முகாமிற்கு அமீரக செயலாளர்
மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.இரத்ததான முகாமை 89.4 FMன் RJ நாகா அவர்கள் சிறப்பாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் H.அபுல் ஹசன், அமீரக து.செயலாளர் A.அசாலி அஹ்மது, அமீரக கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், IT Wing துணை செயலாளர் பொதக்குடி அசார், துபை மாநகர துணைச்செயலாளர்கள் பயாஸ் அகமது,சலீம், செயற்குழு உறுப்பினர் ஆசிப், துபாய் IT WING செயலாளர் N.சபீர் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியை துபை மாநகர பொருளாளர் லால்பேட்டை . சபீக் அவர்கள் ஒருங்கிணைத்தார்.இறுதியாக துபாய் மாநகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


இம்முகாமில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: உலக செய்திகள்

Share this