Breaking News

லால்பேட்டையில் வேன் ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி என்.முருகுமாறன் வழங்கினார்.

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்பேட்டை காயிதேமில்லத் வேன் ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு   கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 75 குடும்பங்களுக்கு அ.இ.அ.தி.மு. கழக அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் அவர்கள் தமது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காயிதேமில்லத் வேன் ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவியாக தலா 5 கிலோ அரிசி,மளிகை பொருட்கள் , போன்றவை வழங்கினார். அருகில் நகர கழக செயலாளர் ஏஆர் சபியுல்லா ,லால்பேட்டை தொ வே கூ சங்க தலைவர் நசீர் அஹமது, நகர கழக பொருளாளர் வசந்தகுமார், காயிதேமில்லத் வேன் ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்கதைச் சேர்ந்த தலைவர் சாதிக்,துணை தலைவர் ஹாஜி முஹம்மது, செயலாளர் வாஹிதீன், நூருல்லன், ஜின்னா மற்றும் நிர்வாகிகள் கதிரவன், கோபி, சுதாகர், உள்ளிட்ட கட்சியினர் பலரும் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this