Breaking News

அமீரக இந்தியத் தமிழர்கள் நலன் குறித்த வலைத் தள கலந்துரையாடல் கூட்டம்.

நிர்வாகி
0

அமீரகத்தில் அவதியுறும் இந்தியத் தமிழர்கள் நலன் குறித்து விவாதிக்க அமீரக காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த காணொளி கூட்டம் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் பேரவையின் பொதுச்செயலாளர் கீழக்கரை எஸ்.கேஎஸ்.ஹமீதுர் ரஹ்மான் முன்னிலையில் 04/05/2020 வியாழன் மாலை அமீரக நேரப்படி 7:30 மணிமுதல் 10:15 மணி வரை நடைபெற்றது.

நிகழ்வை அபுதாபி மண்டல கொள்கை பரப்புச் செயலாளர் கொள்ளுமேடு மெளலவி சிராஜுத்தீன் மன்பஈ இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

பேரவைப் பொருளாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்றுப் பேசினார்.

வெளிநாட்டில் அவதிப்படும் தமிழர்களின் நிலை குறித்தும், அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவது குறித்தும் பல்வேறு கருத்துக்களை அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள்,அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருடன் பரிமாரப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடா நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு,தமிழ் அமைப்புகள் தோழமை அரசியல் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து விவரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை.சாகுல் ஹமீது, அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் சிவக்குமார், அமீரக திமுக செந்தில் ரங்கராஜன், பிரபு, ISC அல்அய்ன் தலைவர் முபாரக், அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக், மதிமுக வெல்லிச்சேரி பாலமுருகன், அபுதாபிஜமாத்துல் உலமா சபை தலைவர் மெளலவிஹுசைன் மக்கி,இந்திய முஸ்லிம் பேரவை காதர் மீரான் ஃபைஜி, மரஹபா சமூக நலப் பேரவை தாஜுதீன், எழுத்தாளர் ஜெஸிலா பானு, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், குவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்தலிப், பொதுச் செயலாளர் முகம்மது அலி சிராஜுதீன்,துபை தமிழ் மன்றம் ஆசிஃப் மீரான்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முத்தமிழ் வளவன், செயலாளர் சங்கத்தமிழன்,துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் ஆஷிக் அலி,அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் செயலாளர் முகம்மது சித்திக்,சமூக சேவகர் கல்லிடைகுறிச்சி முகைதீன்,சமூக ஆர்வலர் பிலால் அலியார்,மக்கள் மன்றம் பிர்தவ்ஸ் பாஷா,ம.ஜ.க அமைப்பாளர் அல்அய்ன் கஸ்ஸாலி, ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

பேரவையின் நிர்வாகிகள் சார்பில் ஷார்ஜா மண்டல துணைச் செயலாளர் மக்கி ஃபைசல், வடக்கு அமீரகங்களின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை.முஹம்மது அன்சாரி,வடக்கு அமீரக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் முகைதீன் பாட்சா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வில் பேரவையின் துணைத் தலைவர் கீழக்கரை ஜமாலுதீன், பேரவையின் மண்டல செயலாளர்கள் அல்அய்ன் தையுப் அலி, லால்பேட்டை அமினுல் ஹுசைன் மன்பஈ, ராசல் கைமா ஜமீல் ஜிப்ரி, அஜ்மான் மதுக்கூர் ஹிதாயத்,ஷார்ஜா தஞ்சை பாட்ஷா கனி, துபை மண்டல துணைச் செயலாளர் அய்யம்பேட்டை அமானுல்லா,மக்கள் தொடர்பு செயலாளர் முத்தின் மைந்தர் ஃபைஜூர் அலி, பகுதி செயலாளர்கள் கராமா அய்யம்பேட்டை தர்வேஷ் ,தேரா ஹம்தான் கரீம், சோனாப்பூர் லால்பேட்டை கிஃபாயத்துல்லா, லால்பேட்டை சல்மான்,அல் ரீம் பகுதி செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயற்குழு உறுப்பினர் கும்பகோணம் சாதிக், அபுதாபி மண்டல ஊடகத்துறை செயலாளர் பூந்தை ஹாஜா,லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்,மற்றும் ஜமாத்தார்கள்,சமூக ஆர்வலர்கள் தாய்ச்சபை அபிமானிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துணைப் பொதுச் செயலாளர் மற்றும் துபாய் மண்டலச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

வலைத்தள சந்திப்பின் காணொளி காட்சியின் (ZOOM) நிகழ்வுகளை மின்னணு ஊடகத்துறை செயலாளர் சொக்கம்பட்டி முகம்மது கபீர் ரிபாய் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

முத்தீனா பகுதி செயலாளர் கீழக்கரை முஹம்மது காமில் நன்றி கூற, அபுதாபி மண்டலச் செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Tags: உலக செய்திகள்

Share this