Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுமக்களின் நலன்கருதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

நிர்வாகி
0
பெறுதல்:- உயர்திரு செயல் அலுவலர் அவர்கள் பேரூராட்சி லால்பேட்டை "பொருள் "

1, ஊரடங்கின் போது துப்புறவு சுகாதாரப் பணிகள் மிகவும் சிறப்பாக செய்த அனைவரையும் பாராட்டுகிறோம். "வாழ்த்துக்கள்." 2, ஊரடங்கின் போது பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் பெறும் சிரமத்தில் உள்ளதால் வீட்டுவரி, தொழில்வரி, போன்ற இதர வரி வசூல்களையும் தமிழ் நாடு அரசு அறிவித்த சலுகையின்படி கால தாமதமாக வசூலிக்க வேண்டுகிறோம்.மேலும் வசூல் செய்யும் போது ஒரிஜினல் பில்லை கொடுத்து பணம் வாங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

3,மெயின் ரோடு பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வாய்க்கால் பாலத்திற்கு கீழ் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் வவ்வால் குடியிருப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே அதை அகற்றி துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4, காயிதே மில்லத் சாலையில் உள்ள வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் நிரைந்த சாக்கடையாக உள்ளது, தேங்கிய தண்ணிரானது வடிவதற்க்கு வழி இல்லாமல் இருப்பதால் வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தூந்து போன வாய்க்காள்களை தூர்வாரி சரி செய்யும்படி வேண்டுகிறோம் தற்போது அரசு மேற்கொண்டு வரும் மராமத் பணிகளில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு வாய்க்கால்களை தூர்வார ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

5, காயிதே மில்லத் சாலை ரோடு ஏரிக்கரை மெயின் ரோடு மற்றும் சிங்கார வீதி ரோடு மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகையால் இந்த ரோடுகளை துரிதமாக சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6, வரும் மழை காலங்களில் கொசுக்களால் டெங்கு போன்ற நோய்கள் வருவதற்கு காரணமாக இருப்பதால் அதன் முன்னெச்சரிக்கையாக புகை அடிக்கும் இயந்திரம் மற்றும் தெளிப்பான்கள் மூலம் சுகாதார பணிகளை மேற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 7, லால்பேட்டையில் உள்ள வீதியின் பெயரை பொதுமக்களுக்கு தெரியும்படி மற்ற ஊரில் உள்ளதுபோல் பெயர் பலகை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பெயர் பலகை வைக்கும்போது வீதியின் பழைய பெயர் மற்றும் வழக்கமாக உள்ள பெயரையும் சேர்த்து எழுதவும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தங்களிடம் மனுவாக அளிக்கின்றோம் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Tags: லால்பேட்டை

Share this