Breaking News

லால்பேட்டை சுகாதார மையம் - LALPET HEALTHCARE CENTER திறப்புவிழா

நிர்வாகி
0

அகிலங்கள் அத்தனையும், அழகோடு ஆண்டருளும்,மகிமையான அல்லாஹ்வுக்கே, மகத்தான புகழ் யாவும்!! அகிலத்தின் அதிபதியைப் போற்றிய லால்பேட்டை கவிஞரின் கவிதையால் அந்த ஏக இறைவனை போற்றி.

லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கனவாகவும், மிக அத்தியாவசியத் தேவையாகவும் இருந்த 24 - மணிநேரமும் இயங்கக்கூடிய குறிப்பாக இரவு நேர மருத்துவ தேவையினை லால்பேட்டை மண்ணின் மைந்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் வாயிலாக திட்டம் தீட்டப்பட்டு அதனைச் செயல்படுத்த மருத்துவத்துறை மற்றும் பிறத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை சந்தித்து ஒரு குழு அமைத்து திட்டத்தினை செயல் படுத்திதர வேண்டுக்கோள் விடுக்கப்பட்டதை முழு மனதோடு ஏற்றுச் சிறப்பாக பல சிரமத்திற்கு மத்தியிலும் களப்பணி செய்து (இறைவனின் உதவியை கொண்டு) வெற்றியாக்கி 24 - மணி நேரமும் இயங்கக்கூடிய லால்பேட்டை_சுகாதார_மையம் - LALPET HEALTHCARE CENTER அமைத்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17-07-2020 வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு திறப்புவிழா காணவும் அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சையினை குறைந்த கட்டணத்தில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவ ஆலோசனை குழு தலைவர் Dr.முஹதஸ்ஸிம் பில்லா, நியமத்துல்லாஹ், அனிசுர் ரஹ்மான், தாஹிர் உசேன், முஹம்மது இலாஹி மற்றும் இவர்களோடு இணைந்து பணியாற்றிய எங்கள் மரியாதைக்குரிய (மர்ஹும்) ஹசன் பாய் அவர்கள் (வல்ல ரஹ்மான் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தை வழங்குவானாக)

இவர்கள் அனைவருக்கும் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக மனதாரப் பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் .جزاكم الله خيرا كثيرا.... என்ற துஆவின் மூலம் இறைவனிடம் கையேந்தி திறப்பு விழா அழைப்பிதழை வெளியிடுவதில் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை பெரும் மகிழ்ச்சியடைகிறது. யா அல்லாஹ் உன்னையன்றி பாதுகாக்க சிறந்தவனும் இல்லை. யா அல்லாஹ் உன்னையன்றி நிர்வகிக்க சிறந்தவனும் இல்லை. உன் நாட்டத்தால் உருவாக்கினோம், உன் துணையோடு! இதில் இருக்கும் குறை, நிறைகளால் வரும் தீங்கிலிருந்தும் எங்களைக் காத்திடு. இந்த மருத்துவமனையை அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக்கு!! இதற்காக உழைத்த உடலாலும், பொருளாலும் அனைத்து மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உன்னுடைய நற்கூலியை வழங்குவாயாக!!! உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம் !!

Tags: லால்பேட்டை

Share this