தமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்
பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ என்ற இணையதள விண்ணப்பத்தின் வாயிலாக 09.08.2020-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவரும் தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவான விழி-யின் இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயனடைய அதிகம் Share செய்யங்கள். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 9944877673.
Tags: பயனுள்ள தகவல்