லால்பேட்டை மஸ்ஜித் ஆதம் பள்ளிவாசல் நீர் தேக்கத் தொட்டி கட்ட உதவிடுவீர்..!
சமுதாய சொந்தங்களே, லால்பேட்டை வேப்பணாங்கேணி கிழக்கில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மஸ்ஜித் ஆதம் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு வக்ஃபு செய்யப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். அப்பள்ளி தற்போது மிகப்பெரும் தப்லீக் மர்கஸ் ஆகவும், புதிதாக இஸ்லாத்தை ஏற்போருக்கு கற்பிக்கும் கூடமாகவும், இரவு பகல் அமல்களில் ஈடுபடும் நல்லடியார்களின் கேந்திரமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சிறுவர்களுக்கான மக்தப், ஹிப்ளு வகுப்புகள் போன்றவைகளும் நடைபெறுகின்றன.
பெண்கள் ஜமாஅத் நமதூருக்கு வரும்போது அவர்கள் தங்கவும், அமல்கள் செய்யவும் தனி இட வசதி உள்ளதால் பெரும் பயனை சமூகத்திற்கு வழங்க முடிகிறது.
இந்நிலையில் இப்பள்ளியின் தண்ணீர் தேவைக்காகவும், சுற்றி வாழும் வீடுகளில் மக்கள் பயனுபடுத்தவும் தண்ணீர் வசதி ஏற்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.
அதற்காக பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் புதிய water Tank மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டி வருகிறோம்.
இப்பள்ளிக்கு சொத்துக்களோ இதர வருமானங்களோ இல்லை. எனவே இப்பணிக்கு உதவும் பொருட்டு கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வாங்கித்தர தாங்களும் முன் வர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்ன பொருள் வேண்டும் என்பதை பள்ளியின் முத்தவல்லி. அவர்களையும் , கண்காணிப்பாளர் அவர்களையும் அணுகிக் கேட்டு வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
O.P. ஹஸன்.
+919585052109
முத்தவல்லி.
S.H.அப்துஸ்ஸமது.
+919944008712
கண்காணிப்பாளர்.
Tags: லால்பேட்டை