லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக் குழு கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் 23-10-2020 வெள்ளி கிழமை காலை ஃபஜ்ர் தொழுகை பிறகு ஜாமிஆ மன்பஉல் அன்வார் தாருத் தஃப்ஸீர் கட்டிடத்தில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், மவ்லானா மவ்லவி, ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
மதினா மஸ்ஜித் இமாம், மவ்லவி O A.ஹலீலுர்ரஹ்மான் பாகவி அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
நகர செயலாளர் மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லானா S. முஹம்மது அலி ஹள்ரத் அவர்கள் மாநில மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விபரித்து கூறுகின்றார்கள்.
இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர்கள் உட்பட அதிகமான ஆலிம்கள் கலந்து கொண்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அறிவிப்பின் படி அனைத்து ஆலிம்களும் தங்களுடைய உறுப்பினர் பதிவை பதிவு செய்து புதுப்பிக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாத புதிய ஆலிம்களை உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும்
இப் பணிக்காக மஸ்ஜித் இமாம்கள் உள்ளிட்ட ஆலிம்கள் குழுவை அனைத்து மஹல்லாக்களுக்கும் நியமனம் செய்யப்பட்டது இப்படிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபை
Tags: லால்பேட்டை