Breaking News

சிதம்பரம் தொகுதி எங்களுக்கு சாதகமான தொகுதி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

நிர்வாகி
0
திருச்சி, அக். 16-

வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல மைச்சராக வேண்டியது காலத் தின் கட்டாயம் என்று அய்யம் பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

அய்யம்பேட்டை சமுதாயப் புரவலர் வாலன் ஜெய்லான் பாட்சா இல்லத் திருமணத்திற்கு 15.10.2020 வியாழன் காலைவருகை தந்த போது, ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தி யாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- அய்யம்பேட்டை திருமண நிகழ்ச்சி

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ஓய்விலிருந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் வெளியில் வந்துள்ளேன். அய்யம் பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்பதற்காக வந்த இடத்தில், செய்தி யாளர் களாகிய உங்களையெல்லாம் சந்திக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். நேரம் ஒதுக்கி வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வுடன் உங்கள் கூட் டணி தொடருமா? அப்படித் தொடர்ந்தால் எத் தனை இடங் களில் போட்டியிடுவீர்கள்?

பதில்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பன்னெடுங் காலமாகக் கூட்டணி யில்தான் இருக்கிறோம். நேற்று இருந்தோம், இன்று இருக்கிறோம், நாளையும் இருப்போம். இது வெறுமனே தேர்தலை மட்டும் நோக்க மாகக் கொண்டு, தேர்தல் முடிந்த வுடன் மாற்றுப் பாதைகளில் பயணிக்கும் கூட்டணியல்ல. மாறாக, கொள்கைக் கூட்டணி. இஸ்லாமிய கொள் கைகளும், திராவிடக் கொள்கைகளும் - ஒரு சில கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், சுமார் தொன்னூற்று ஒன்பது சதவிகிதம் ஒத்துப் போவதால், எங்களால் இப்படி இணைந்திருக்க முடிகிறது. சட்டமன்ற தேர்தல்

வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ கத்தின் முதலமைச்சர் ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் உள்ளது. அந்த விருப்பம் நிறைவேற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் நாங்கள் எங்கள் சக்திக்குட்பட்டு எல்லா வகையிலும் அரும்பாடுபட்டு உழைப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தைப் பொருத்த வரை முஸ்லிம்களின் வாக்குகள் சுமார் 60 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயமே ஒட்டு மொத்தமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகிற்குத்தான் வாக் களிப்பார்கள் அல்லது முஸ்லிம் லீக் சொல் வதைத்தான் கேட்பார்கள் என்று நாங்கள் நம்புவதுமில்லை, சொல்வதுமில்லை. அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளிலும் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்

ஆனால், மஹல்லா ஜமாஅத்தை மையமாகக் கொண்ட சுமார் ஆறாயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன. அவர்களிடம் கண்ணிய த்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் காலந்தொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் என்னவெனில், எப்போதும் அவர்கள் அமைதியாக இருப்பார்கள்... தேர்தல் என்று வரும்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் யாருக்கு ஆதரவளிக்கிறது என்பதைக் கருத்தில் எடுத்துப் பேசுவார்கள். ஒரு சில மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் அதில் இருந்தாலும், இறுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ன அறிவிக்கிறதோ அந்த அறிவிப்பை ஏற்றுச் செயல்படுவார்கள். இன்று வரையிலும் இந்த நிலை தொடர்கிறது. இனியும் தொடரும். ஆர்ப்பாட்டம்

பொதுவாகவே, எடுத் ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், பெரும்பெரும் போராட் டங்கள் என்றெல்லாம் நாங்கள் எங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பு

இந்தப் பகுதியில் இருக்கும் ஜமாஅத் என்பது மிகப் பெரியது. இங்கிருந்த கருத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து, அனைவரும் ஓரணியில் மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பின் கீழ் இருப்பதற்கான ஒருங் கிணைப்புப் பணிகளை நான்தான் செய்தேன். இப்படி தமிழகமெங்கும் எங்கள் பணி தொடர்ந்து இருந்து வருகிறது. திருச்சியில் இ. யூ. முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்

இம்மாதம் 19ஆம் நாளன்று திருச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற விருக்கிறது. அதில், வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கட்சியின் நடவடிக்கைகள், அணுகு முறைகள் குறித்துக் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்ற விருக்கிறோம். அப்போது அதுகுறித்து உங்களிடம் சொல்வோம்.

அதுபோல, அக்கூட்ட த்திற்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலுமுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவைக் கூட்டி, அந்தந்த மாவட்டங்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து நவம்பர் 08ஆம் நாளுக்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்கவிருக்கிறோம். அவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் எமது தேர்தல் நடவடிக்கைகள் அமையும்.

கேள்வி: "எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அப்படி அவர் சொல்லவில்லை. சொன்னதாக சில ஊடகங்கள் பரப்புகிறார்கள். செய்தி யாளர்களாகிய உங்களுக்கு முக்கியமான ஒரு கருத்தை இங்கு நான் சொல்கிறேன்.

கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது என்று ஒரு நிலை வர வேண்டுமானால், தேர்தல் ஆணையம்தான் அதன் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும். தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம் என்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒரு சின்னம் என்று அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டி யிடுவார்கள். அதிமுக உட்பட மற்ற கூட்டணிகளில் அங்கம் வகிப்பவர்களும் அந்தந்தக் கூட்டணிக்கான சின்னத்தில் போட்டி யிடுவார்கள். தேர்தல் முடிந்து, முடிவுகள் அறி விக்கப்பட்ட பிறகு, அவரவர் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் பொறுப்புகளுக்கு வருவார்கள். தேர்தல்ஆணையம் - சீர்திருத்தம்

இப்படியொரு சீர்திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால், ஒரே சின்னத்தில் கட்சிகள் போட்டியிடுவது என்பதில் ஏற்படும் சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

ஆனால், தற்போது நடைமுறை அப்படியில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம் இருக்கிறது. திமுகவுக்கு உதயசூரியன் இருக்கிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஏணி சின்னம் இருக்கிறது. இந்தச் சின்னம் கேரள மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் என்பதால் இந்தியா முழுக்கவும் இச்சின்னத்தில் நாங்கள் போட்டியிட இயலும். எங்களைப் போலத் தான் கம்யூனிஸ்ட் கட்சியும். மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் அவர்களும் அங்கீகரிக் கப்பட்ட சின்ன த்தைக் கொண்டு ள்ளார்கள். அச்சின்ன த்தில் இந்தியா முழு க்கவும் அவர்கள் தேர்தலில் போட்டி யிடுவார்கள்.

இப்படி, இந்தியாவில் 2 ஆயிரத்து இருநூற்று தொன்னூற்று எட்டு கட்சிகள் இருப்பதாகத் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றுள் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எண்ணிக்கை 59. அவற்றுள் ஒன்றாகவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது. அதுபோல, அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஏழு. காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் அதில் அடக்கம். அங்கீகரிக்கப்பட்ட ஒவ் வொரு கட்சிக்கும் ஒரு சின்னத்தைத் தேர்தல் ஆணை யம் நிரந்தரச் சின்னமாகத் தந்திருக்கிறது. திமுகவுக்கு உதயசூரியன் போல, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஏணி சின்னம் போல. அப்படி ஒதுக்கப்பட்ட சின்னத்தில்தான் அந்தந்தக் கட்சிகள் நிற்கும். இதற்கு முன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அப்படி நிரந்தரச் சின்னம் கிடையாது. அந்தக் காலகட்டங்களில் உதயசூரியன், இரட்டை இலை, கை சின்னம் என எல்லாச் சின்னங்களிலும் அந்தந்தத் தருணத்து கூட்டணிகளில் அங்கம் வகித்தபோது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டிருக்கிறது. இப்போது எங்களுக்குத் தனிச்சின்னம் இருப்பதால் அதில்தான் நாங்கள் போட்டியிடுவோம். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

அதுபோல, கூட்டணியில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகள் விரும்பினால் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார்கள். "இல்லையில்லை... எங்களுக்குத் தனித்தன்மை வேண்டும்..." என்று கருதுவோர் இந்த நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

அரவக்குறிச்சி தேர்தலில் 236 பேர் போட்டியிட்டனர். அப்போது, கல்வியறிவில்லாத கிராமத்து மக்கள் இரட்டை இலையைப் பார்த்து வாக் களித்தார்கள். ஆனால் இன்று சாதாரணமாக ஒரு சுயேட்சை கூட தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் நின்றால்தான் அல்லது உதய சூரியன் சின்னத்தில் நின்றால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலை இப்போது இல்லை. சின்னம் என்பது இப்போது ஒரு பிரச்சினையே கிடையாது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மணப்பாறையில் ஏணி சின்னத்தில் போட்டி யிட்டது. அக்காலத்தில் இந்தச் சின்னம் அத் தொகுதியிலிருந்த யாராலும் அறியப்படாதது. ஆனால், ஒவ்வொரு கிராமத் திலுள்ள வீட்டினராலும் அச்சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 73 ஆயிரம் வாக்குகளைத் தந்தார்கள்.

கேள்வி:கோவிட் 19 பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத் திய - மாநில அரசுகள் நல்ல முறையில் செய்து வருகின்ற னவா?

பதில்: அவை சரியாகச் செயல்படவில்லை என எல்லா எதிர்க்கட்சிகளுமே குற்றஞ்சாட்டி இருக்கின்றன. ஒன்றுமே செய்யவில்லை என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியாது. மத்திய - மாநில அரசுகள் சில பணிகளைச் செய்திருக்கி றார்கள். ஆனால், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னதைப் போல மக்களின் தேவைகளையறிந்து இக்கால கட்டத்தில் முழுமையாக அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்திருக்க வேண்டும். வெறும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு நிறுத்திக் கொண்டார்கள். இப்போது மீண்டும் இரண்டாயிரம் கொடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என தளபதி அவர்கள் கூறினார்கள். அது செய்யப்பட்டிருந்தால், மக்கள் இன்று படும் அல்லல்கள் ஓரளவுக்காவது குறைந்திருக்கும். மொத்தத்தில், மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அவர்களின் தேவைகளையறிந்து, உரிய நேரத்தில் தேவையானவற்றைச் செய்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்து போல ஏதோ நடந்திருக்கிறது. அவ்வளவுதான்!

கேள்வி: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரி டையேயும், இன்ன பிற பொறுப்பாளர் களிடையேயும் கருத்து வேறுபாடுகள் வருவதும், பின்னர் அவர்கள் ஒன்று சேருவதுமாக இருக்கிறதே...? இதுகுறித்த உங்கள் கருத்தென்ன? பதில்: அதிமுகவைப் பொருத்த வரை அவர்கள் செய்து வரும் அனைத்தும் மக்கள் முன் அரங்கேற்றப்படும் நாடகங்களே என்று நாங்கள் நம்புகிறோம். சாதாரண நாட்களில் இப்படி ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள்... ஒருவரை யொருவர் விமர் சித்துக் கொள்வார்கள்... தேர்தல் வரும்போது மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். அதைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள எதுவும் இல்லை.

கேள்வி: சசிகலா விடுதலை யானால் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? பதில்: சசிகலா விடுதலை யானால், அவரும் அதிமுகவில் ஒன்று சேர்வார். நான் முன்னரே கூறியது போல, அவர்கள் அனைவரும் ஒன்றா கத்தான் இருக்கிறார்கள். மக்களால் கட்சி மறக்கப் பட்டு விடக் கூடாது என்ப தற்காக, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது போல காட்டிக் கொண்டு, மாநிலத்தில் பேசுபொருளாக முயற்சிக்கிறார்கள். இது அவர்களது வழமை, வாடிக்கை. கேள்வி: திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்குமா? முளைக்காதல் லவா? அது போலத்தான் இதுவும். அத்தைக்கு மீசை ஒருபோதும் முளைக்காது. கடையநல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் அபூபக்கர் எம்எல்ஏ அவர்களும், ராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதியில் நவாஸ்கனி எம்பி அவர்களும் இதே ஏணி சின்னத்தில் நின்றுதானே வெற்றி பெற்றிருக்கிறார்கள்? ஒவ்வொரு கூட்டணிக்கும் தனித்தனி சின்னம்

ஆக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் நிரந்தரமாக தரப் பட்டுள்ள சின்னத்தில் நிற்பார்கள். அவை அல்லாத கட்சிகள் அவ்வப்போது தரப்படும் சின்னங்களிலும் நிற்பார்கள் அல்லது கூட்டணி யின் ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தில் நிற்பார்கள். நான் சொல்லவருவது தற்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு சின்னம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்பதைத்தான். இருந்தாலும் இதற்கு தீர்வு என்று ஒன்று வரவேண்டும் ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல தேர்தல் ஆணையம் தனது சட்ட விதிகளை திருத்தி கட்சிகளுக்குத் தனிச் சின்னம் என்பதை இல்லாம லாக்கி விட்டு, ஒவ்வொரு கூட்டணிக்கும் தனித்தனி சின்னம் என்று கொண்டு வர வேண்டும். அப்படி போட்டி யிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அந்தக் கட்சியை அங்கீகரிப்போம் என்றும் சொல்லவேண்டும். அப்படிச் செய்தால் சின்னம் என்பது ஒரு சர்ச்சை ஆக்கப்படாது. ஆனால் தற் போது ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் ஒரு சின்னத்தை ஒதுக்கி அதற்கு அங்கீகாரம் வழங்கும் சூழல் இருக்கும்போது, சின்னம் குறித்து விவாதிப்பதற்கு அவசியம் இல்லை.

கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பாபநாசம் தொகுதியைக் கேட்டுப் பெறுவீர்களா? பதில்: தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகு ஒவ்வொரு கூட் டணியிலும் எத்தனைக் கட்சிகள், எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறுகின்றன என்பதைப் பொருத்துதான் அது குறித்து தெளிவாக சொல்ல முடியும்.

சுருங்கச் சொன்னால் தமி ழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி போட்டியிடும். அதன் வெற்றிக்கும், தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சர் ஆவதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மூச்சுடன் உழைக்கும். அதை இப்போது தான் செய்கிறோம் என்று இல்லை. மாறாக, எப்போதும் நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

234 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என எங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகதான் முடிவெடுத்து அறிவிக்கும். சூழலைப் பொறுத்து கூடுத லாக தாருங்கள் என்று கேட் போம் அவர்கள் கலந்து பேசி எங்களுக்கு ஒதுக்கித் தருவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்... அவ்வளவுதான். ""இல்லை இல்லை... நாங்கள் கேட்ட அளவுக்குத் தொகுதிகள் தரப்பட வில்லையானால் கூட்டணியில் இருந்து விலகுவோம்! வெளியேறு வோம்!!"" என்றெ ல்லாம் சொல்லப்போவதில்லை. அப்படிச் சொல்வது எங்கள் வழமையிலும் இல்லை.

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங் கோட்டை தொகுதியில் நாங்கள் போட்டி யிட்டு வெற்றியும் பெற்று இருக்கிறோம். தற்போதைய தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் தொகுதியில் நாங்கள் முன்பும் பலமுறை போட்டியிட்டு வென்று இருக்கிறோம் தற்பொழுதும் அத்தொகுதியில் எங்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை ஆகிய இரண்டு தொகுதிகள் உள்ளன. திருவாடானை புதுத் தொகுதி. ராமநாதபுரத்தில் ஏற்கனவே நாங்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளோம்.

புதுக் கோட்டையில் அறந்தாங்கி தொகுதியில் ஏற்கனவே நாங்கள் போட்டி யிட்டு இரண்டாயிரம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். எனவே அதுவும் எங்களுக்கு சாதகமான தொகுதிதான்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி 1, திருச்சி 2 - அதாவது இத்தொகுதிகள் தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு என்று அழைக்கப்படுகின்றன. அவை இரண்டிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டு உள்ளது.

கரூர் மாவட் டத்தில் அரவக் குறிச்சி தொகுதியில் பலமுறை போட்டி ருக்கிறோம். நான் கைந்து முறை வெற்றிகளையும் பெற்றி ருக்கிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் தொகுதியில் முன்பு நாங்கள் போட்டிருக்கிறோம்.

கடலூர் மாவட்டத்தில் புவனகிரிதொகுதியில் போட்டியிட்டு வென்றும் இருக்கிறோம்; தோற்றும் இருக் கிறோம். அது தற்போது சிதம்பரம் தொகுதியில் இனைக்கப்பட்டுள்ளது எனவே சிதம்பரம் தொகுதி எங்களுக்கு சாதகமான தொகுதியாக கருதுவோம் நாகப்பட்டினம்மாவட்டம் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆகியுள்ளதால் பூம்புகார் தொகுதி புது மாவட்டத்திற்குள் வந்து விட்டது. அத்தொகுதியில் ஏற்கனவே நாங்கள் போட்டி யிட்டு இருக்கிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் ஏற்கனவே நாங்கள் போட்டியிட்டு சொற்ப வாக்கு கள் வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி. சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டு வென்றும் இருக்கிறோம்; வெற்றி வாய்ப் பை இழந்தும் இருக் கிறோம்.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகள் நாங்கள் போட்டியிட்டு வென்றவை. ஆக, நான் மேற்கூறிய இவைதான் நாங்கள் போட்டியிடுவதற்குச் சாத கமான தொகுதிகள். இதற்குள் போட்டியிடுவதற்குத்தான் கூட்டணியில் எங்கள் வேண்டுகோள் இருக்கும். நிறைவில், கூட்டணியின் தலைமை எங்களுக்கு ஒத்துக்கித் தருவதை ஏற்றுக் கொண்டு, கூட்டணியின் வெற்றிக்காக என்றும் போல் அர்ப்பணித்து உழைப்போம்.

இந்த தொகுதிகளை தாண்டி ""அதைத் தாருங்கள்! இதை தாருங்கள்!!"" என பொருளின்றி எந்த தொகுதியையும் நாங்கள் கேட்கப்போவதில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் அல்லாத பிற முஸ்லிம் சமுதாயக் கட்சிகளும் - நான் மேற்சொன்ன இந்தத் தொகுதி களுக்குள்தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதற்குள்தான் அவர்கள் கேட்கவும் செய்வார்கள் என்று கருதுகிறேன். இந்த தொகுதிகளை தாண்டி வேறு எங்கும் நாங்கள் போட்டியிட கேட்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதர தொகுதிகள்

அனைத்திலும் முஸ்லிம்களின் மொத்த வாக்குகளே வெறும் இரண் டாயிரம், ஐந்தாயிரம், ஏழாயி ரம், பத்தாயிரம், இருபத்து ஐந்தாயிரம், முப்பதாயிரம் என சொற்ப அளவில்தான் இருக்கின்றன என்பதை நாங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நான் மேற்குறிப்பிட்ட தொகுதி களில் மட்டும் தான் 50 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக முஸ்லிம்களின் வாக்குகள் உள்ளன. எனவே, எங்கள் கூட்டணியில் எங்களுக்கு சாதகமில்லாத இடங்களைக் கூட்டணி யாருக்கு ஒதுக்குகிறதோ அவர்களின் வெற்றிக்காக முழுமூச்சுடன் உழைப்போம். எங்களுக்கு ஒதுக்கப் படும் இடங்களில் கூட்டணி கட்சியினரும் முழு மூச்சுடன் உழைப்பார்கள்.

இவைதான் எதார்த்தம். இதில் ஒளித்து மறைத்துப் பேச ரகசியம் என எதுவுமே இல்லை. எல்லாமே வெட்ட வெளிச்சம்தான்! இவ்வாறு அவர் கூறினார்.

Tags: செய்திகள்

Share this