Breaking News

நபியே இதயம் உங்களைத் தேடுகிறது..!

நிர்வாகி
3

இரவு உறக்கம் கலைகிறது...இதயம் ஏதோ தேடுகிறது! நெருங்கிய ஒன்று தூரம் சென்றது போல் உள்ளம் சுக்கு, சுக்காய் நொறுங்குகிறது.

பாலையாய் இருந்த உலகை, சோலையாக மாற்றிய... நபியே...... உங்கள் சொல் வழிகாட்டியாய் மாறுகிறது.. அன்பென்ற சொல்லுக்குப் பொருள் கொடுத்த, உங்கள் வாழ்க்கை! வாழ வலுவூட்டுகிறது

நீங்கள் வரா...கனவு காட்சி தர நடுங்குகிறது‌. சொல்லுக்கும்,செயலுக்கும் இடைவெளி இல்லா.. உங்கள் வாழ்க்கை அறத்திற்கு இடைகழி ஸ்டேஷனாகிறது.

அனாதையாய், அரசானாய் உங்கள் வாழ்க்கை,கைத்தடியாய் மாறுகிறது. அல்லாஹ்வைத் துதிக்கக் குகை,மலை வாழ்க்கையை நினைத்தால், உள்ளம் ரணத்தில் உணர்ச்சியற்றுப் போகிறது.

எதிரிகளும் எழுந்து நிற்கும் உங்கள் பணிவைப் பற்றிக் கொள்ள உள்ளம்... உங்களை நோக்கி விரைகிறது. ஏகத்துவத்தை நிலை நிறுத்த.... நீங்கள் பட்ட கஷ்டங்களில் ....மனம் பங்கு கோருகிறது.

நீங்கள் வாழ்ந்த வீட்டில் அரைமணி நேரம் அமைதிப் பெற உள்ளம் அலை மோதுகிறது.. உங்கள் சொலில்லா வாழ்க்கை, வெளிச்சமற்ற வானமாக இருள்கிறது.

உங்களைப் பார்க்கா இமைகள் இழைய மறுக்கிறது...உங்களை நினையாமல் இதயம்‌ இரத்தத்தோடு நனையாமல் நகர்கிறது.

நற்பண்புகளின் பரிபூரணத்தைக் கொஞ்சம் உரசிக் கொள்ளத் தோல்கள் கேட்கிறது. உங்கள் கரம் பற்றி நடக்கக்‌ கால்கள் நாடுகிறது‌.

சோர்வில்லா உங்கள் முகத்தைக் காணக் கண்கள் கலங்குகிறது.சொர்கத்தில் உங்களுடன் உணவுண்ண வயிறு‌ இப்போது, பசிக்க மறுக்கிறது ‌.

நாளை மறுமையில் உங்கள் பரிந்துரைக்காக அல்லாஹ்விடம், குழந்தைப் போல் தேம்பத் தோன்றுகிறது. நபியே! நாளை மறுமையில் உங்கள் சந்திப்பை உலகமே எதிர் நோக்கிறது.

நபியே..! இரவு உறக்கம் கலைந்து ..இதயம் உங்களைத் தேடுகிறது....

A.H.யாசிர் ஹசனி

25/10/2020

Tags: இஸ்லாம்

Share this

3 Comments

  1. please visit:
    Nidur Seasons
    NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்
    Seasons Ali Video (English/தமிழ்)..!
    SEASONSALI
    seasonsali
    SEASONSNIDUR
    seasonsnidur - சீசன்ஸ் நீடூர்
    அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.

    பதிலளிநீக்கு