Breaking News

லால்பேட்டையில் நடைப்பெற்ற SDPI கட்சி கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

கடலூர் மாவட்ட SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் (20.10.2020) அன்று மாவட்ட தலைவர் ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் தலைமையில் லால்பேட்டை நகர SDPI கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் கமாலுதீன் அவர்கள் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன் அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மக்பூல் அஹமது, முஜிபுர்ரஹ்மான், ரஹமத்துல்லா மற்றும் தொகுதி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக PFI மாவட்ட தலைவர் பயாஸ்_அஹமது மற்றும் SDPI நகர தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வரும் சட்டமன்ற தேர்தலை (2021) கருத்தில் கொண்டு அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, மேலும் வரும் 01.11.2020 அன்று ஆயங்குடி நகர் வருகை தரும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது, தேசிய துணை தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக கடலூர் தொகுதி தலைவர் ஹிதாயத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Tags: லால்பேட்டை

Share this