லால்பேட்டையில் SDPI கட்சியின் முப்பெறும் விழா நடைப்பெற்றது
லால்பேட்டை நகரில் இன்று (09.10.2020) SDPI கட்சியின் சார்பில் முப்பெறும் விழாவாக அரசியல் பயிலரங்கம் கொவிட்19 களப்பணி செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகி SDPI கட்சியில் இணையும்_விழா ஆகியவை மாவட்ட தலைவர் ஹமீத்_ஃப்ரோஜ் அவர்கள் தலைமையில் பனிஷா மஹாலில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அஹமதுல்லா வரவேற்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் நிஜாம்_முகைதீன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தந்தார்கள். மேலும் மாவட்ட துணை தலைவர் ஷர்புதீன், மாவட்ட செயலாளர் மக்பூல்_அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மதுஅலி நகர செயலாளர் #ஷைபுதீன் உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் நிஜார் அஹமது தொகுத்து வழங்கினார். இறுதியாக தொகுதி தலைவர் நூருல்லா நன்றியுரையாற்றினார்.
Tags: லால்பேட்டை