கோவையில் முஸ்லிம் லீக் சார்பில் பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லம் அர்ப்பணிப்பு
கோவை சிறையில் சில வருடங்களுக்கு முன் மரணமடைந்த அப்துல் ஓஜிர் குடும்பத்தின் சூழலை கருதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பைத்துர் ரஹ்மா இறையருள் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை கட்டிக்கொடுக்க தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலின் அடிப்படையில் மாநில கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் கோவை ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் நிலம் வழங்கியதை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து பைத்துர் ரஹ்மா இறையருள் இல்லம் காட்டிக்கொடுத்து இன்று பயனாளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் பி.அப்துல் கபூர் தலைமை தாங்கினார்.
கோவை மாவட்டங்களின் நிர்வாகிகள் கே.பி.அப்துல் ரஹீம், கே.ஏ.முஹம்மது யூசுப், எஸ்.எம்.காசிம், பி.முஹம்மது பஷீர், எல்.ஏ.முஹம்மது ஷிப்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., இல்லத்தை அர்ப்பணித்தார்.
மாநில துணை தலைவர் பி. எஸ். ஹம்சா, மாநில செயலாளர் மில்லத் எஸ். பி. மில்லத் இஸ்மாயில், அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் லால்பேட்டை ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தலைமை நிலைய பாடகர் ஷேக் மதார் இஸ்லாமிய கீதம் பாடினார்.
இந்நிகழ்வுகளில் உலமாக்கள், கோவை மாவட்ட முஸ்லிம் லீக்கினர், ஜமாஅத்தார்கள், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
Tags: சமுதாய செய்திகள்