குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது.
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடத்தப்படட்டு வரும் குழந்தைகள் நலம் காப்போம் (பெண்கள் சிறப்பு பயான்) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஐந்தாம் நிகழ்வு இன்று 30-12-2020 புதன்கிழமை மதியம் 2:30 முதல் லால்பேட்டை ஜாகீர் ஹுசைன் J.H பள்ளி வளாகத்தில் ஜாகீர் நகர் மஸ்ஜித் ஹக்கானி ஜும்மா மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மவ்லானா மவ்லவி ஹாபிழ் M.முஹம்மது காஸிம் மன்பயீ, ஹள்ரத், அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் ஜாகீர் ஹுசைன் நகர் அனைத்து மஸ்ஜித் முத்தவல்லிகள், இமாம்கள், J H பள்ளி நிர்வாகிகள் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள், மக்தப் மாணவர்கள் , மற்றும் பெரும் திரளாக பெண்கள் கலந்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை