Breaking News

லால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா! SS.ஹாரூன்ரசீது கொடி ஏற்றிவைத்தார்!

நிர்வாகி
0
டிச.03,

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கைகாட்டி மற்றும் சாவடி உள்ளிட்ட இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் ஏற்றும் நிகழ்வு 03.12.2020 நடைப்பெற்றது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்த மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரசீது அவர்கள் எழுச்சிமிகு கோசங்களுக்கு மத்தியில் அவ்விடங்களில் கொடிகளை ஏற்றி வைத்தார்.

இதில் மாநில துணை செயலாளர் இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் பொருளாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹுசைன் உள்பட மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this