Breaking News

தமிழ்நாடு முதலமைச்சருடன் போரசியர் கே.எம்.காதர்மொகிதீன் சந்திப்பு ..!

நிர்வாகி
0

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனிய|ன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் போராசியர் கே.எம்.காதர்மொகிதீன் மற்றும் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், முதன்மை துணைத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல்ரகுமான், துணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து முதலமைச்சரின் கொரோனா நிவாரணநிதிக்காக ரூபாய் 5 லட்சம் வழங்கினார்கள்

பின்னர் போராசியர் கே.எம்.காதர்மொகிதீன் நிருபர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியியதாவது: -

தேர்தலுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக பொருப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலினை நேரிடையாக சந்திக்கின்ற வாய்ப்பு பெறமுடியவில்லை

எனக்குஉடல்நிலை சரியில்லாதால் சந்திக்க வர முடியவில்லை இப்பொழுது நேரம் ஒதுக்கினார் சந்தித்து வாழ்த்து சொன்னோம்

ஆட்சிக்கு வந்து 44 நாட்கள் ஆகிறது, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது, மக்களால் எதிர்ப்பார்த்த ஆட்சி நடக்கிறது. ஏழை - எளிய மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

தி.மு.கவை விமர்ச்சித்தவர்கள் எழுதிய அறிஞர்கள் மற்றும் உள்ளவர்களுக்கும் கூறுகிறார்கள். இதுபோன்ற முன்மாதிரி ஆட்சியைதான் எதிர்ப்பார்த்தோம் என்று,, முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சி நடத்திக்கொண்டுயிருக்கிறார். கெரோனா தொற்றியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க செய்துள்ளார்.

மிகப்பெரிய போர் நடத்தினோம் 35 ஆயிரம், 40 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு 5 ஆயிரத்திக்குள் வந்துள்ளது.

சாதனை படைத்த தமிழக முதலமைச்சரை பாராட்டுக்கிறார்கள் வரவேற்கிறார்கள் போற்றுக்கிறோம் இதுதொடர்பாக அவருடைய ஆட்சியை பாராட்ட வாழ்த்திவிட்டு வந்திருக்கிறோம்.

முதலைமச்சரை சந்திக்கிறோம் என்றால் கோரிக்கை வைக்காமல் போக முடியுமா? முஸ்லீம் சமுதாயத்தின் கோரிக்கைகளை முன்பு கலைஞரிடம் தொடர்ந்து கூறி குறிப்பிட்டோம்.

அதேபோன்றுதான் முதலமைச்சரிடம் கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் முந்தையை அரசு சுயநிதி பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களுக்கு ஆசிரியர் சம்பளம் கொடுக்காமல் பாரபட்சம் முறையை பின்பற்றி வந்தார்கள் அதை மாற்றி பெரும்பான்மை, சிறுபான்மையினர் நடத்திவரும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தி அரசங்கமே சம்பளம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிவாசல்கள் கட்டும்போது கலெக்டர் அனுமதியை பெற்று தான் கட்டவேண்டும் என்ற சட்டம் உள்ளது.

இந்த பகுதியில் பள்ளிவாசல் கட்டினால் வகுப்பு கலவரம் நடக்கும் என்று மொட்டை கடிதம் போட்டு தடுத்துவிடுகிறார்கள் அந்த சட்டத்தை நீக்க வேண்டும். பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டுயிருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டும்

பள்ளிவாசலில் பணிப்புரியும் உலமாக்களுக்கு கொரோனா கால பேரிடநிதி தரப்படவில்லை என்று அதையும் தெரிவித்தோம்.

முதலமைச்சர்தளபதி மு.க.ஸ்டாலினை, தமிழகம்,, இந்திய மக்கள் மட்டுமின்றி உலகமக்களே இந்த ஆட்சியை பாராட்டுக்கிறார்கள். நாங்களும் இறைவனிடம் வேண்டுகிறோம். மேலும் அவர் கூறியிதாவது:-

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதி குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது இதுகுறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தை பொருத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் தி.மு.க கூட்டணியில் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கிறது, வெற்றிபெற்றாலும் இருப்பார், வெற்றிவாய்ப்பை இழந்தாலும் இருப்போம்

எங்களுக்கு மூன்று தொகுதியை வழங்கினார்கள். வெற்றிபெறவில்லை. கூட்டணி கட்சிகள் எல்லாம் வெற்றிபெற்றபோது நாங்கள் வெற்றிபெறவில்லையே என்று சமுதாயத்தினர் மத்தியில் ஆதாங்கம் இருக்கிறது - அதற்காக கூட்டணியை விட்டு செல்லமாட்டோம் - தி.மு.கவுடன் எங்கள் உறவு வரலாற்று பாராம்பரியமான உறவு ,கூட்டணியில் என்றும் தொடருவோம்.

முதலமைச்சரை சந்தித்து கொரோனா நிவராண நிதியாக சிறிய தொகை ரூபாய் 5லட்சம் கொடுத்தோம். நிறைய கொடுக்க வேண்டும் எங்களிடம் இருந்ததை கொடுத்தோம் - இவ்வாறு பேராசியர் கே.எம்.காதர்மொய்தீன் தெரிவித்தார்..

Tags: செய்திகள்

Share this