தலைமைச் செயலகத்தில் முஸ்லிம் இயக்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நிர்வாகி
0
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்கள் நேரில் சந்தித்து வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்திற்கு புதிய கட்டடம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் / குடும்பத்தினருக்கு திருமண உதவித் தொகை உயர்வு, ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள் / கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, சிறுபான்மையினர் நல விடுதி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் செலவினத் தொகை உயர்வு போன்ற பல்வேறு திட்டங்களை சிறுபான்மையின மக்களின் நல்வாழ்விற்காக மானியக் கோரிக்கையில் அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர் மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, பா.அப்துல் சமது, வக்ப் வாரிய உறுப்பினர் ஏ. எஸ். பாத்திமா முஸப்பர், சென்னை முஸப்பர் அஹமது, ஜமாஅத்துல் உலமா சபை, எஸ். டி.பி ஐ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags: சமுதாய செய்திகள்