வசீம் அக்ரம் குடும்பத்திற்கு உதவ மஜக தலைமை முடிவு!
நிர்வாகி
0
செப்:14.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர தலைமை நிர்வாக குழு கூட்டம் நேற்று இரவு 9.30 மணிக்கு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி ( ZOOM) வழியே நடைப்பெற்றது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா . நாசர், அவைத் தலைவர் நாசர் உமரீ, இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், ராவுத்தர்ஷா,தைமியா, மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
பணிகள் மற்றும் பயணங்கள் காரணமாக மற்ற பல நிர்வாகிகளால் இதில் பங்கேற்க இயலவில்லை.
இதில் மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களின் பணிகள் நினைவு கூறப்பட்டு அவருக்காக பிரார்த்திக்கப்பட்டது.
பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. போதைப் பொருட்களுக்கு எதிராக செயல்பட்டு தன் இன்னுயிரை தியாகம் செய்த தியாகி.வசீம் அக்ரம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தித்து, அவரது குடும்பத்திற்கு என்றும் துணை நிற்பது என தீர்மானிக்கப்பட்டது
2.. வசீம் அக்ரம் அவர்களின் குடும்பத்தினரின் எதிர்கால நலன் கருதி, மஜக சார்பில் குடும்ப நல நிதி வசூலிப்பது என்றும், அவரின் குடும்ப உறுப்பினர் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, அதன் வழியே மட்டும் நிதி சேகரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
3. தமிழக அரசு வசீம் அக்ரம் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் கருணை நிதியும், அவர் மனைவிக்கு கல்வி தகுதி அடிப்படையில் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
4.. வசீம் அக்ரம் கொல்லப்பட்ட செப்டம்பர் 10 ஆம் தேதியை, மஜக சார்பில் வருடந்தோறும் 'போதைப் பொருள் எதிர்ப்பு தினமாக ' கருதி விழிப்புணர்வு மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது
5. வசீம் அக்ரம் கொலை வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படவும், அவர்கள் விரைந்து தண்டிக்கப்படவும் தொடர்ந்து சட்டப் போரட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
6. வசீம் அக்ரம் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், வலை தளங்களில் இரங்கல் பதிவு வெளியிட்ட அமைப்புகள், ஆறுதல் கூறிய நல் உள்ளங்கள், வலை தளங்களில் கண்டனத்தை பதிவிட்டவர்கள், நேரில் வந்து துயரத்தை பகிர்ந்து கொண்டவர்கள், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு கொண்டு வந்த கட்சிகள், நேர்மையுடன் இப்பிரச்சினையை அணுகிய அரசு அதிகாரிகள், செய்தி மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் மஜக வின் சார்பிலும், அக்குடும்பத்தினர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவுற்றது.
Tags: செய்திகள்