Breaking News

ஹஜ் பயணிகளுக்கு இடையூறு செய்யாதீர்... ஒன்றிய அரசுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

நிர்வாகி
0
உலகில் அதிகமாக #புனித_ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இந்தியாவின் 20 முக்கிய விமான நிலையங்களிலிருந்து இந்த சேவைகள் புனிதப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இதனால் அரசுக்கு வணிக ரீதியான லாபங்களும் கிடைத்து வந்தது.
கடந்த ஈராண்டாக கொரணா தொற்று காரணமாக ஹஜ் பயண சேவைகள் நடைபெறாத நிலையில், இவ்வாண்டுக்காண ஹஜ் விண்ணப்ப சேவைகள் தொடங்கியிருக்கிறது.
அதில் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 10 விமான நிலையங்களின் வழியே ஹஜ் பயண சேவைகள் இல்லை என்பது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்லும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிப்படைவர்.
அவர்கள் ஹைதராபாத், கொச்சி, பெங்களுறு விமான நிலையங்கள் வழியே கூடுதல் நேரம், கூடுதல் பொருளாதாரம் செலவழித்து செல்ல வேண்டிய தேவையற்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அதிகமான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக புனித பயணிகளுக்கு இது பெரும் சிரமத்தை தரும். அரசியல் மற்றும் சமுதாய விவகாரங்களில் காட்டி வந்த மத பாராபட்சங்களை ஆன்மீக விவகாரத்திலும் காட்டுவது ஒன்றிய அரசின் உச்சகட்ட காழ்ப்புணர்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது.
எனவே ஹஜ் புனிதப் பயணிகளின் பயண சேவைக்கு இடையூறு செய்வதை தயவு செய்து #ஒன்றிய_அரசு தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அதன்படி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்திய அனைத்து விமான நிலையங்களையும் ஹஜ் பயண சேவைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில், இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அக்கறையெடுத்து மீண்டும் இந்த விமான நிலைய சேவையை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Tags: செய்திகள்

Share this