Breaking News

ஹஜ் பயணத்துக்கு ஜிஎஸ்டி வரி விலக்களிக்க வேண்டும் ..! ரவிக்குமார் எம்.பி

நிர்வாகி
0
ஹஜ் பயணத்துக்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்
ஹஜ் பயணிகள் மீண்டும் சென்னை விமானத்திலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும்!
மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் நான் இன்று அளித்துள்ள கோரிக்கை மனு:
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!
தங்களின் கனிவான பரிசீலனைக்கு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்:
1. விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பால் ஹஜ் யாத்திரையின் விலை அதிகமாகிறது. பயணச் செலவ்சிக் குறைக்க மாற்று வழிகளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2. ஹஜ் யாத்திரைக்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி போன்ற வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஹஜ் யாத்ரீகர்கள் ஏற்கனவே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நியாயமான கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாட்டில் ஹஜ் யாத்ரீகர்கள் அதிக அளவில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 முதல் 4500 யாத்ரீகர்கள் ஹஜ்ஜுக்கு செல்கின்றனர். புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் யாத்ரீகர்களும் சென்னை விமான நிலையத்தை ‘எம்பார்கேஷன் பாயின்டாக’ பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு ‘எம்பார்க்கேஷன் பாயின்ட்’ பட்டியலில் சென்னை இல்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாறாக, மத்திய அரசு கொச்சியை எம்பார்க்கேஷன் பாயின்டாக அறிவித்துள்ளது. கொச்சி சென்னையிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மத்திய அரசின் இந்த எதிர்பாராத மற்றும் தர்க்கமற்ற நடவடிக்கை யாத்ரீகர்கள் மத்தியில் கலக்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தயவுசெய்து முடிவை மறுபரிசீலனை செய்து, சென்னையை மீண்டும் எம்பார்கேஷன் பாயின்ட் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: செய்திகள்

Share this