Breaking News

தேசிய லீக் பஷீர் அஹமது காயிதேமில்லத் பிறை விருது திருமாவளவன் வழங்கினார்

நிர்வாகி
0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று நடைபெற்றது. 
 

நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கினார். இதேபோல்,   மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருதும், பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும் வழங்கினார். காயிதேமில்லத் பிறை விருதை அல்ஹாஜ் மு. பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருதை செம்மொழி க.இராமசாமி ஆகியோர் பெற்றனர்.

Tags: செய்திகள்

Share this