துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா
துபாய் :
அமீரகத்தில் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் வரலாறுகளை கற்பிக்கும் வகையில் மக்தப் மதரஸா துவங்கப்படுகிறது
உலக அளவில் கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் மாபெரும் புரட்சி செய்து வரும் இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் துபாய் மர்கஸ் ஸகாஃபாவில் தமிழ் மக்தப் மத்ரஸா பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் துவங்கப்படுகிறது.
ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் கீழக்கரை பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களின் தலைமையில் மௌலவி எம்.எஸ். நூருத்தீன் ஸகாஃபி MA (சென்னை) சிறப்புரையும் , முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃரூப் கருத்துரையாற்றுவார்கள்
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இக்பால் காகா, கமால் காகா, சிகாபுதீன் காகா, யாசீன் காகா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் பெருந்தகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பெண்கள் பயான் கேட்க தனி இட வசதி உள்ளது
மத்ரஸாவில் பிள்ளைகளை சேர்த்திட 056 2468913, 050 4732833, 04 2973999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags: உலக செய்திகள்