அமீகரத்தில் இப்தார் கூடாரம் அமைக்க அனுமதி..!
தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), அதன் முக்கிய கூட்டாளிகளுடன் இணைந்து, இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்திற்கான இப்தார் கூடாரங்களை அமைப்பதற்கான நெறிமுறைகளை இன்று அறிவித்துள்ளது.
NCEMA படி, இப்தார் கூடாரங்களுக்குள் நுழைய பச்சை நிற பாஸ் மற்றும் முகக்கவசம் கட்டாயமாகும். ஒவ்வொரு ரமலான் கூடாரத்திலும் மக்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் ஒழுங்குபடுத்த பாதுகாப்புக் காவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
நெறிமுறைகளின்படி, இப்தார் கூடாரங்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் திறந்திருக்கும் ஒரு வித்தியாசமான வடிவமைப்பில் இருக்க வேண்டும் அல்லது அனைத்து தேவையான பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இருந்தால் குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
Tags: உலக செய்திகள்