அபுதாபி லைலத்துல் கத்ர் கமிட்டி நடத்திய லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி.
ரமலான் பிறை 27 லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் அபுதாபியில் உள்ள அனைத்து முஸ்லீம் சங்கங்களும் ஒன்று சேர்ந்து லைலத்துல் கத்ர் இரவு நிகழ்ச்சியை ஒற்றுமையாக வணக்கங்களை நிறைவேற்றுவார்கள்
அதே போன்று இந்த வருடமும் நாள் 27-04-2022 புதன்கிழமை இரவு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் மிக சிறப்பாக லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியினை அபுதாபி நோபல் குழுமத்தின் தலைவர் ஜனாப் ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் தலைமையில்
ADEEB குழுமத்தின் தலைவர் ஜனாப் அன்சாரி அவர்கள், பனியாஸ் பில்ட்டிங் மெட்டிரியல் குழுமத்தின் தலைவர் ஹமீது ஹாஜியார் அவர்களின் மகனார் ஜனாப் முஹம்மது அலி மற்றும் சிட்டிஸன் குழுமத்தின் தலைவர் அடியக்கமங்கலம் ஜனாப் M.ஹசன் அலியார் ஆகியோரின் மேற்பார்வையில்
நடந்தேறியது
நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் மார்க்கத் துறை செயலாளர் S. M. B. ஹுசைன் மக்கி மஹ்ழரி அவர்கள் முறைபடுத்தினார்கள்
நிகழ்ச்சி இரவு 8:20 மணி அளவில் இஷா தொழுகையுடன் தொடங்கி அதனை தொடர்ந்து தராவீஹ் தொழுகை, தஸ்பீஹ் தொழுகை அதனைத் தொடர்ந்து இரவு 10:00 மணி அளவில் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி முதல்வர் மெளலவி அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் ஆலிம் பாகவி சிறப்பு செற்பொழிவு வழங்கினார்கள்.
இறுதியாக சிறப்பு துஆ தவ்பாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக பங்கேற்றனர்
இந்த சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கம், இந்திய முஸ்லிம் பேரவை-IMF, அபுதாபி லால்பேட்டை ஜமாத், மர்ஹபா சமூக நலப்பேரவை, அபுதாபி மௌலிது கமிட்டி மற்றும் அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை அமைப்பு நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.
Tags: உலக செய்திகள் சமுதாய செய்திகள்