சிதம்பரத்தில் நடைபெற்ற சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா ..!
சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு மற்றும் சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா ...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு !
கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலமாக்கள், ஜமாஅத்தார்கள் சந்திப்பு மற்றும் சமய நல்லிணக்க இஃப்தார் பெருவிழா 04/04/2024 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் எம்.ஓய்.எம் பைசல் மஹால் அரங்கில் சிதம்பரம் நகர தலைவர் எஸ்.எம்.எம்.அன்வர் அலி தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி முஹம்மது அலி ஃபாஜில் மன்பஈ, கடலூர் தெற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜெக்கரியா, செயலாளர் ஏ. சுக்கூர், பொருளாளர் சஹாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைச் செயலாளர் ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரையாற்றினார்.
திமுக மாவட்ட கழக செயலாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான திரு தொல் திருமாவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர்.
விசிக மாநில பொதுச் செயலாளர் திரு சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி முன்னணி தலைவர் சிதம்பரம் மூஸா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திரு தொல் திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்தி நிரைவுறையாற்றினார்.
சிதம்பரம் நகர கௌரவ ஆலோசகர் மஹபூப் ஹுசைன், நகர பொருளாளர் அப்துல் ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் முஸ்தபா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
விசிக மாநில நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர், காங்கிரஸ் கமிட்டி சிதம்பரம் நகர தலைவர் மக்கீன், மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் பரங்கிப்பேட்டை முஹம்மது யூனுஸ், ஊடகவியாளர் திருச்சி ஷாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தெற்கு மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ஆரிப், பண்ருட்டி அப்துல் மாலிக், கஸ்ஸாலி, காட்டுமன்னார்கோயில் நிசார் அஹமது, லால்பேட்டை நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது, பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா, முஹம்மது சித்தீக், பரங்கிப்பேட்டை தலைவர் மவ்லானா ஷேக் ஆதம், உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் மாவட்ட - நகர நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், சங்கைமிக்க உலமாக்கள், சிதம்பரம், புவனகிரி, பூதகேனி, கணகரப்பட்டு, பின்னத்தூர் கோவிலாம்பூண்டி, காட்டுமன்னார் கோயில், ஆயங்குடி, லால்பேட்டை, எள்ளேரி, கொள்ளுமேடு, மானியம் ஆடுர், டி.நெடுஞ்சேரி, கந்தகுமாரன், மேல் புவனகிரி, முட்லூர், ஆதிவராகநல்லூர் ஜமாத்தார்கள், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மையம், மனித நேய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமை கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: செய்திகள்