மர்ஹபா சமூக பேரவைக்கு அமீரகத் தந்தை மேதகு ஷேக் ஜாயிது விருது… !
அபுதாபியில் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நடைப்பெற்ற தமிழர் விழிப்புணர்வு மாநாடு மற்றும் இன்பம் பொங்கும் இஃப்தார் விழா இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பெரு அரங்கில் 24.04.2022 அன்று நடைப்பெற்றது …
சிறப்புரை விருந்தினர்களாக தாயகத்திலிருந்து
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்
மு தமி்முன் அன்சாரி Ex.MLA, மஜக தலைமை ஒருங்கிணைப்பாளார் மெலளா நாசர்,
கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர்
உ.தனியரசு Ex.MLA, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அவ் சிறப்பு நிகழ்வில் மர்ஹபா சமூக நலப் பேரவைக்கு மனித சேவையை பாராட்டி “அமீரகத் தந்தை மேதகு ஷேக் ஜாயிது “ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விருதினை மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர்
S.A.ரஃபி அஹமது,M. ஷூஐப் மற்றும் நஜீர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
Tags: உலக செய்திகள்